45 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் தரக்கூடிய Amazfit ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.
Amazfit நிறுவனம் அதன் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்சை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் லைட் டிசைன் உடன் வந்துள்ளது
இதன் ஒரிஜினல் விலை ரூ.7 ஆயிரத்து 999 ஆகு
Amazfit நிறுவனம் அதன் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்சை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் லைட் டிசைன் உடன் வந்துள்ளது. 15 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் செப் இயங்குதளம் இடம்பெற்று உள்ளது.
Amazfit GTS 4 Mini விலை தகவல்.
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்ச், மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க், மிண்ட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூலை 16-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் மற்றும் அமேஸ்பிட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதன் ஒரிஜினல் விலை ரூ.7 ஆயிரத்து 999 ஆகும். ஆனால் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.6 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Amazfit GTS 4 Mini சிறப்பம்சம்.
அம்சங்களை பொருத்தவரை 1.65 இன்ச் ஹெச்.டி AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 270 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதில் இடம்பெற்று உள்ளது.
இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை நீடிக்குமாம். அதுமட்டுமின்றி இதில் உள்ள பேட்டரி சேவர் மோட் அம்சத்தை பயன்படுத்தினார் 45 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் என கூறப்படுகிறது. 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களும் இதில் இடம்பெற்று உள்ளன.
Amazfit வழங்கும் இந்த கடிகாரம் 24 மணிநேர SpO2 வாசிப்பு மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு மானிட்டர் மற்றும் பயோட்ராக்கர் போன்ற அம்சங்களை வழங்குகிறது. Amazfit GTS 4 Mini சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், நடைபயிற்சி போன்ற 120க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகளைக் கொண்டுள்ளது. கடிகாரத்தில் ஐந்து செயற்கைக்கோள் பொருத்துதல் அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், Amazfit GTS 4 Mini ஸ்லீப் மானிட்டர், இரத்த அழுத்தம், ஸ்ட்ரெஸ் டிராக்கர், வானிலை புதுப்பிப்பு, ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், ஸ்டாப் வாட்ச், அலாரம் வாட்ச், உட்கார்ந்த நினைவூட்டல் மற்றும் இரத்த ஆக்ஸிஜன் டிராக்கர் ஆகியவற்றைப் பெறும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile