AMOLED ஸ்க்ரீன் மற்றும் 12 நாட்கள் பேட்டரி லைப் தரும் Amazfit வாட்ச் அறிமுகம்.
ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் Amazfit GTR. 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக 47.2 எம்.எம். மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன் இதில் பயோ டிராக்கர் PPG பயோ-டிராக்கிங் ஆப்டிக்கல் சென்சார், 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் வழங்கப்படுகிறது.
Amazfit GTR. சிறப்பம்சங்கள்:
– 1.2-இன்ச் 390×390 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, AF கோட்டிங்
– ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐ.ஒ.எஸ். 10.0 தளங்களுக்கான சப்போர்ட்
– பயோ டிராக்கர் PPG பயோ-டிராக்கிங் ஆப்டிக்கல் சென்சார், 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
– ஏர் பிரெஷர் சென்சார், கேபாசிட்டிவ் சென்சார்
– ஆம்பியன்ட் லைட் பிரைட்னஸ் சென்சார்
– ப்ளூடூத் 5.0
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– 195 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இதில் 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.இதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் ஸ்டான்ட்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் கொண்டிருக்கிறது.
அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடல் ஸ்டாரி பிளாக், செர்ரி பிலாசம் பின்க், மூன்லைட் வைட் மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile