அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTR 4 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த ஸ்மார்ட்வாட்ச் IFA சர்வதேச நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் மேம்பட்ட ஜிபிஎஸ் பொசிஷனிங், 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் ஸ்டாண்ட்-அலோன் மியூசிக் பிளேபேக் வசதி கொண்டிருக்கிறது.
இத்துடன் புதிய அமேஸ்பிட் GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார், ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், மேம்பட்ட பிட்னஸ் அம்சங்கள் மற்றும் செப் ஆப் மூலம் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி லைஃப், பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் சூப்பர்ஸ்பீடு பிளாக் மற்றும் விண்டேஜ் பிரவுன் லெதர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.