இப்பொழுது உங்களின் சாதாரண டிவி ஆகும் ஸ்மார்ட்டிவியாக Xiaomi TV Stick 4K அறிமுகம்

இப்பொழுது உங்களின் சாதாரண டிவி ஆகும் ஸ்மார்ட்டிவியாக  Xiaomi TV Stick 4K அறிமுகம்
HIGHLIGHTS

சியோமி தனது புதிய ஸ்மார்ட் சாதனமான சியோமி டிவி ஸ்டிக் 4கே செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

Xiaomi TV Stick 4K ஆனது குவாட் கோர் கார்டெக்ஸ் A35 செயலி மற்றும் டூயல் பேண்ட் Wi-Fi ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டுள்ளது

சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலின் விலை இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

ஸ்மார்ட்போன் பிராண்டான சியோமி தனது புதிய ஸ்மார்ட் சாதனமான சியோமி டிவி ஸ்டிக் 4கே செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் சமீபத்தில் இந்த டிவி ஸ்டிக்கின் டீசரை வெளியிட்டது. புதிய டிவி ஸ்டிக் டால்பி அட்மோஸ், டால்பி விஷன் மற்றும் 4கே ரெசல்யூஷனுக்கான ஆதரவைப் பெறுகிறது. Xiaomi TV Stick 4K ஆனது குவாட் கோர் கார்டெக்ஸ் A35 செயலி மற்றும் டூயல் பேண்ட் Wi-Fi ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டுள்ளது. டிவி ஸ்டிக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்…

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

 சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலின் விலை இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை Mi வலைதளத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

Xiaomi TV Stick 4K சிறப்பம்சம்.

புதிய சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலில் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் உள்ளது. இத்துடன் நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ ஷாட்கட் கொண்ட Mi வாய்ஸ் ரிமோட் உடன் வழங்கப்படுகிறது.

மற்ற சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இது Dolby Vision, Dolby Atmos மற்றும் DTS HD ஆகியவற்றை ஆதரிக்கிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த டிவி ஸ்டிக்கில் 4K ரெசல்யூஷன் வீடியோவையும் பார்க்க முடியும். வயர் கமாண்ட் ரிமோட் டிவியுடன் கிடைக்கிறது. ரிமோட்டில் பல ஷார்ட்கட் பட்டன்கள் ஆதரிக்கப்படுகின்றன. Netflix, Prime Video மற்றும் Disney+ Hotstar போன்ற பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான குறுக்குவழிகளையும் கொண்டுள்ளது.

இவை தவிர புதிய சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. புதிய சியோமி டிவி ஸ்டிக் 4K மாடலில் குவாட் கோர் கார்டெக்ஸ் A35 பிராசஸர், ARM மாலி G31 MP2 GPU, டூயல் பேண்ட் வைபை, ஆண்ட்ராய்டு டிவி 11 மற்றும் பேட்ச்வால் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo