Xiaomi அறிமுகம் செய்தது 4K QLED ஸ்மார்ட்டிவி மாசன அம்சம் கொண்டிருக்கும்
Xiaomi Smart TV X சீரிஸ் இதில் 43, 50 மற்றும் 55 இன்ச் 4K TVகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
இரண்டாவது Xiaomi X Pro QLED சீரிஸ் . இதில் 43, 55 மற்றும் 65 இன்ச் 4K QLED டிவிகள் உள்ளன
திய Xiaomi TVகள் 2 GB RAM மற்றும் 30W வரையிலான ஸ்பீக்கர்களுடன் நிரம்பியுள்ளன
ஸ்மார்ட் டிவி பிரிவில் Xiaomi பிடி வலுவாக உள்ளது. இந்தியாவின் பண்டிகைக் காலம் தொடங்கும் முன், நிறுவனம் இரண்டு புதிய டிவி சீரிஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது- Xiaomi Smart TV X சீரிஸ் இதில் 43, 50 மற்றும் 55 இன்ச் 4K TVகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது Xiaomi X Pro QLED சீரிஸ் . இதில் 43, 55 மற்றும் 65 இன்ச் 4K QLED டிவிகள் உள்ளன. புதிய Xiaomi TVகள் 2 GB RAM மற்றும் 30W வரையிலான ஸ்பீக்கர்களுடன் நிரம்பியுள்ளன. மேலும் இதிலிருக்கும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
Xiaomi Smart TV X Series Price in india
Xiaomi X Pro QLED Series யின் 43 இன்ச் மாடலின் விலை 34,999 ரூபாயாகும், 55 இன்ச் டிவியின் விலை 49,999ரூபாயாகும் மற்றும் 65 இன்ச் மாடலின் விலை ரூ.62,999. இந்த டிவிகளில் ரூ.7 ஆயிரம் வரை தள்ளுபடியும் கிடைக்கும். ஆகஸ்ட் 30 முதல், அவை mi.com, Amazon.in, Flipkart மற்றும் Xiaomi ரீடைலர் விற்பனைக் கடைகளில் கிடைக்கும்.
Xiaomi Smart TV X சிறப்பம்சம்.
இவை 43, 50 மற்றும் 55 இன்ச்களில் வருகின்றன. 3840 × 2160 பிக்சல்கள் கொண்ட 4K டிஸ்ப்ளே வழங்குகிறது, அதன் கோணம் 178 டிகிரி ஆகும். டிஸ்ப்ளே டால்பி விஷனை சப்போர்ட் செய்கிறது இந்த டிவிகளில் ஏ55 குவாட் கோர் பிராசஸர் உள்ளது. மாலி G52 MC1 GPU உடன். 2 ஜிபி ரேம் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் சேமிப்பு 8 ஜிபி. இவை கூகுள் டிவியில் இயங்குகின்றன மற்றும் சியோமியின் பேட்ச்வால் அவற்றில் உள்ளது.
Xiaomi ஸ்மார்ட் டிவி Dolby Audio, DTS-X சவுன்ட் இதில் கிடைக்கிறது. டிவியுடன் வரும் வாய்ஸ் ரிமோட் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல ஆப்ஸிற்கான பிரத்யேக பட்டன்களையும் வழங்குகிறது.
Xiaomi X Pro QLED சீரிஸ் சிறப்பம்சம்
இந்த டிவிக்கள் 43, 55 மற்றும் 65 இன்ச் ஸ்க்ரீன் சைஸ்களில் வருகின்றன. இது 3840 × 2160 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 4K QLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. விவிட் பிக்சர் எஞ்சின் மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த டிவிகளில் A55 குவாட் கோர் ப்ராசஸரும் உள்ளது, அதனுடன் Mali G52 MC1 GPU இணைக்கப்பட்டுள்ளது. ரேம் 2 ஜிபி மற்றும் ஸ்டோரேஜ் 32 ஜிபி. கூகுள் டிவியில் இயங்கும் Xiaomi X Pro QLED TV 30 வாட் ஸ்பீக்கர் சப்போர்டை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கங்குவா திரைபடம் ரிலீஸ் தேதியில் மாற்றம் காரணம் என்ன?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile