Mi டி.வி விற்பனையில் மிக சிறந்த சாதனை 2.5 லட்சம்

Updated on 04-Oct-2019
HIGHLIGHTS

சிறப்பு விற்பனை துவங்கிய சில நாட்களில் சியோமி நிறுவனம் 2.5 லட்சம் Mi டி.வி.க்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தீபாவளி முன்னிட்டு ஆன்லைன் ஷோப்பிங் தளங்களான ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும்மற்றும் paytm  போன்ற தளங்களில்  சிறப்பு விற்பனை நடந்து முடிந்தது,மேலும் தீபாவளி சிறப்பு விற்பனையில் சியோமி, Realme , சாம்சங், ஒப்போ, விவோ மற்றும் பல்வேறு மற்ற நிறுவனங்களின் சாதனங்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சிறப்பு விற்பனை துவங்கிய சில நாட்களில் சியோமி நிறுவனம் 2.5 லட்சம் Mi டி.வி.க்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

Mi டி.வி. விற்பனை விவரம்

அமேசான் தளத்தில் விற்பனையான டி.வி.க்களில் முதல் ஐந்து டி.வி.க்களில் இரு மாடல்கள் Mi டி.வி.க்கள் ஆகும். அந்த வகையில் Mi டி.வி. 4சி ப்ரோ (32) மற்றும் Mi டி.வி. 4ஏ ப்ரோ 43 மாடல்கள் முறையே #1 மற்றும் #2 இடங்களை பிடித்திருக்கின்றன. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அதிகம் விற்பனையான டி.வி.க்களில் Mi டி.வி. முதலிடம் பிடித்திருக்கிறது.

இத்தனை டி.வி.க்கள் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசான் தளத்தின் கிரேட் இந்தியன் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் விற்பனையாகி இருக்கின்றன. பண்டிகை கால சிறப்பு விற்பனை துவங்கிய ஒவ்வொரு நிமிடத்திற்கும் 43 Mi டி.வி.க்கள் விற்பனையாகி இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :