சியோமி இந்தியாவில் Mi Tv 4A Horizon Edition ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்க்ரீன் அளவுகளில் கிடைக்கிறது. இந்த டிவி ஒரு HD மற்றும் FHD ரெஸலுசனை கொண்டு வருகின்றன. ஹொரைசன் பதிப்பின் மிகப்பெரிய தனித்துவமான அம்சம் டிவியின் முன்பக்கத்தில் உள்ள பெசல்கள் ஆகும். சியோமியின் குடையின் கீழ் உள்ள 4A குடும்ப தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது, ஹாரிசன் பதிப்பு அதனுடன் ஒரு மெல்லிய பெசல்கள் வடிவமைப்பைக் கொண்டுவருகிறது.
புதிய எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 32 இன்ச் மாடல் விலை ரூ. 13,499 என்றும் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் மாடல் விலை ரூ. 22,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
– 43 இன்ச் 1920×1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
– 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் -ஏ53 பிராசஸர்
– 750MHz மாலி-450 MP3 ஜிபியு
– 1 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம்
– 8 ஜிபி மெமரி
– எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
– எம்ஐ குவிக் வேக்
– வைபை, ப்ளூடூத் 4.2
– 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட்
– 2 x 10W ஸ்பீக்கர்கள், DTS-HD
– 32 இன்ச் 1366×768 பிக்சல் HD எல்இடி டிஸ்ப்ளே
– 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் -ஏ53 பிராசஸர்
– மாலி-450 MP3 ஜிபியு
– 1.5 ஜிபி ரேம்
– 8 ஜிபி மெமரி
– எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
– எம்ஐ குவிக் வேக்
– வைபை, ப்ளூடூத் 4.2
– 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட்
– 2 x 10W ஸ்பீக்கர்கள், DTS-HD
இரு மாடல்களிலும் ஹாரிசான் டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் விவிட் பிக்ச்சர் என்ஜின், மென்பொருள் மற்றும் ஹார்டுவர் அப்டேட்களை கொண்டுள்ளது. இவை டிவி பார்ப்பவர்களுக்கு தலைசிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.
இவற்றில் பேட்ச் வால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்த யுஐ வழங்கப்பட்டுள்ளது. இது 16-க்கும் அதிக மொழிகளில் இருந்து சுமார் 23-க்கும் அதிக சேவை வழங்கும் தளங்களில் இருந்து பொழுதுபோக்கு தரவுகளை பரிந்துரை செய்கிறது. இதற்கு ஏஐ மற்றும் டீப் லேர்னிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது