இதோ இங்கே 5G டிவியும் வந்தாச்சு, Huawei உலகிலே முதல் முறையாக 5G டிவி அறிமுகம் செய்யும்.
Huawei நிறுவனம் உலகின் முதல் முறையாக அதன் 5ஜி டி.வி.யை இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டிவியில் ஹை ரேஷியோவான 8K ரெசல்யூஷன் கொண்டிருக்கும்
Huawei நிறுவனம் உலகின் முதல் முறையாக அதன் 5ஜி டி.வி.யை இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிவியில் ஹை ரேஷியோவான 8K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது பிரீமியம் சாதனங்கள் பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
Huawei தனது 8K டி.வி.யை இந்த ஆண்டு கடைசியில் அறிமுகம் செய்யலாம் என்றும் இதில் 5ஜி மாட்யூல் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதனை Huawei சாத்தியப்படுத்தும் பட்சத்தில் இது உலகின் முதல் 5ஜி டி.வி.யாக இருக்கும். பின் இந்த டி.வி.யில் நேரடியாக அளவில் மிகப்பெரிய டேட்டாக்களையும் இங்கு எளிதாக டவுன்லோடு செய்யலாம்.
2019 ஆண்டின் முதல் காலாண்டில் Huawei நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உயர்-ரக மின்சாதனங்களில் 8K ரெசல்யூஷன் மிகவும் அப்டேட் செய்யப்பட டி.வி. ஸ்கிரீனாக இருக்கும். இது வழக்கமான ஃபுல் HD டிவி.க்களில் இருப்பதை விட 16 மடங்கு அதிக பிக்சல்களை கொண்டிருக்கும்.
சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாக Huawei விளங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் கம்பியூட்டர் சந்தையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்க Huawei முயற்சிக்கிறது. Huawei நிறுவனம் தற்சமயம் டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.
தற்சமயம் சாம்சங் நிறுவனம் உலகின் மிகப்பெரும் டி.வி. உற்பத்தியாளராக இருக்கிறது. சமீபத்தில் சாம்சங் தனது சொந்த 8K டி.வி.யை அறிமுகம் செய்தது. எனினும், இதில் 5ஜி வசதி வழங்கப்படவில்லை. சாம்சங் நிறுவனத்தின் 8K டி.வி. விலை 4999 டாலர்கள் (ரூ.3,46,268) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது ஸ்மார்ட் டி.வி. என்பதால் இதில் வைபை வசதி வழங்கப்படும். 5ஜி வசதி கொண்டிருக்கும் போது இதில் ஃபைபர் ஆப்டிக்ஸ்,DDH . அல்லது வழக்கமான கேபிள் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இது வீட்டில் இருக்கும் மற்ற மின்சாதனங்களுக்கு ரவுட்டர் ஹப் போன்று செயல்படும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile