VU நிறுவனம் டி.வி. சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்தது . புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ஸ்டூடியோ சவுண்ட் இன்டகிரேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
64 பிட் குவாட் கோர் பிராசஸருடன் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் வு பிரீமியம் டி.வி. மாடல்கள் சியோமியின் Mi டி.வி. 4ஏ ப்ரோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை வு பிரீமியம் டி.வி. 32 இன்ச் மாடலில் 32 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1366×768 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் உருவாகி இருக்கும் ஸ்மார்ட் டி.வி.க்களில் கூகுள் குரோம்காஸ்ட் பில்ட்-இன் கொண்டிருக்கிறது. இரு டி.வி.க்களில் ஆண்ட்ராய்டு டி.வி. 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்து"ன் அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு மாடலில் 43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1920×1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 32 இன்ச் மாடலில் 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கரும், 43 இன்ச் மாடலில் 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் டால்பி டிஜிட்டல், டிடிஎஸ் ஸ்டூடியோ சவுண்ட் இன்டகிரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் கோர் ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு இரு டி.வி. மாடல்களிலும் வைபை, ப்ளூடூத், இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள், லேன், ஆர்.எஃப்., ஹெட்போன் ஜாக் மற்றும் ஆப்டிக்கல் ஆடியோ அவுட் வழங்கப்பட்டுள்ளது. இரு டி.வி. ரிமோட்களில் அமேசான் பிரைம் வீடியோ, கூகுள் பிளே, ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் சேவைகளுக்கான ஹாட் கீ வழங்கப்பட்டுள்ளது.
VU பிரீமியம் டியவிய 32 இன்ச் மற்றும் வு பிரீமியம் டி.வி. 43 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 10,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.