Vu டிவி தனது புதிய பிரீமியம் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Vu பிரீமியம் டிவி 2023 பதிப்பு என யாருடைய பெயர் கூறப்பட்டுள்ளது. இது இரண்டு டிஸ்பிளே அளவுகளில் வரும் 4K TV ஆகும். இது 43 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவிலான மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவியில் கூகுள் டிவி இயங்குதளம் உள்ளது. இதனுடன் கேமிங் மோட், டைனமிக் கான்ட்ராஸ்ட் போன்ற அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் 43 இன்ச் மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் மாடலின் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறுகிறது. ஆன்லைன் மட்டுமின்றி இவற்றின் விற்பனை நாடு முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் நடைபெறுகிறது.
2023 Vu பிரீமியம் டிவி மாடல் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கின்றன. இவை அனைத்து விதமான அறைகளிலும் எளிதில் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் A+ கிரேட் 400 நிட்ஸ் பிரைட்னஸ் பேனல்கள், 50 வாட் சவுண்ட்பார் மற்றும் டால்பி ஆடியோ வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த டிவியில் மூன்று புறம் ஃபிரேம்லெஸ் டிசைன், முன்புறம் பார்த்த நிலையில், கீழ்புறத்தில் சவுண்ட்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஒஸ், வாய்ஸ் ரிமோட் உடன் கொண்டிருக்கிறது. Vu ஆக்டிவாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல்-இல் பில்ட்-இன் மைக்ரோபோன் உள்ளது. இது கூகுள் அசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.
இத்துடன் புதிய ரிமோட் பிக்சர், சவுண்ட் உள்ளிட்டவைகளுக்கு ஹாட்கீ கொண்டிருக்கிறது. இதில் 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 4-கோர் சிபியு, சக்திவாய்ந்த ஜிபியு, 16 ஜிபி மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.