ஜப்பானை சேர்ந்த பிரபல பிராண்டான டொஷிபா இந்திய சந்தையில் ஏழு புதிய டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடலில் துவங்கி 65 இன்ச் 4கே யுஹெச்டி ஸ்மார்ட் டிவிக்கள் அடங்கும்.
மேலும் இவற்றில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம், அல்ட்ரா டிம்மிங் தொழில்நுட்பம் மற்றும் ஏஎம்ஆர் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவிக்கள் விடா ஒஎஸ் கொண்டு இயங்குகின்றன. இத்துடன் இவற்றில் பில்ட் இன் அலெக்சா வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இவை பிரீமியம் யுஹெச்டி யு79 சீரிஸ், யுஹெச்டி யு50 சீரிஸ் மற்றும் ஸ்மார்ட் எல்50 சீரிஸ் என மூன்றுவித சீரிஸ்களில் கிடைக்கின்றன. இதன் யுஹெச்டி டிவிக்களில் டொஷிபாவின் செவோ 4கே ஹெச்டிஆர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை டால்பி விஷன் மற்றும் இதர ஹெச்டிஆர் ஃபார்மேட்களை சப்போர்ட் செய்கின்றன.
யு79 சீரிஸ் மாடலில் ஃபுல் அரே லோக்கர் டிம்மிங் டிவி தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. எல்50 சீரிஸ் மாடலில் ஏடிஎஸ் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி சிவோ என்ஜின் பிரீமியம், விடா ஒஎஸ் மற்றும் ஏஎம்ஆர் பிளஸ் தொழில்நுட்பம் உள்ளிட்டவை கொண்டுிருக்கிறது.
இந்தியாவில் 65யு7980 யுஹெச்டி டிவி விலை ரூ. 66,990 என்றும் 55யு7980 யுஹெச்டி டிவி விலை ரூ. 46990 என்றும் 55யு5050 டிவி விலை ரூ. 36,990 என்பும் 50யு5050 டிவி விலை ரூ. 32,990 என்றும் 43யு5050 டிவி விலை ரூ. 27,990 என்றும் 43எல்5050 டிவி விலை ரூ. 22,490 மற்றும் 32எல்5050 மாடல் விலை ரூ. 12,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
அனைத்து டிவி மாடல்களும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமேசான், ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டாடா க்ளிக் உள்ளிட்டவைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.