Xiaomi Mi LED Smart TV 4 இன்று பகல் 2மணிக்கு விற்பனைக்கு வருகிறது

Updated on 22-Feb-2018
HIGHLIGHTS

இந்த TVயின் விலை Rs,39,999 ஆக வைக்கப்பட்டுள்ளது

இதன் பிரேம்லெஸ் வடிவமைப்பு மற்றும் பேட்ச்வால் யூசர் இன்டர்பேஸ் டிவி யின் முக்கிய அம்சங்களில் முதன்மையானதாக இருக்கின்றன. ஆண்ட்ராய்டு இன்டர்நெட் சார்ந்து உருவாகி இருக்கும் பேட்ச்வால் செயற்கை நுண்ணறிவு டேக்நோலோஜியின் டீப் லெர்னிங் வழிமுறை மூலம் இயங்குகிறது. 

பேட்ச்வால் இருப்பதால், செட்-டாப் பாக்ஸ் மற்றும் இண்டர்நெட்டில் கிடைக்கும் தரவுகளை ஒற்றை ரிமோட் மூலம் பரிந்துரைகளுக்கு ஏற்ப தேர்வு செய்து பார்க்க முடியும். இவை அனைத்தும் டி.வி.யன் ஹோம்பேஜில இடம்பெற்றிருப்பது அனைவருக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. 

சியோமி Mi டி.வி. 4 ரிமோட் 11 பட்டன் மற்றும் ப்ளூடூத் கொண்டிருக்கிறது. இதனால் ரிமோட் மூலம் டி.வி.யை இயக்க ரிமோட்-ஐ டி.வி.யை நோக்கி காண்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஸ்மார்ட் டி.வி. மற்றும் செட்-டாப் பாகஸ் அனுபவத்தை ஒற்றை ரிமோட் வழங்குவதால் ஒவ்வொன்றிற்கும் தனி ரிமோட் பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. 

இன்டர்நெட் டேட்டாக்கள் பயன்படுத்த ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், வூட், சோனி லைவ், ஹங்காமா மற்றும் பல்வேறு இதர நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. இவற்றில் 80%-க்கும் அதிகமான தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. எனினும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சேவைக்கான சப்போர்ட் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் சியோமி Mi டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டி.வி.-யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

சியோமி Mi டிவி 4 சிறப்பம்சங்கள்:

– 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் A53 SoC 
– 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-T830 MP2 GPU
– 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி (eMMC 5.1)
– ஆண்ட்ராய்டு மற்றும் MIUI டி.வி. சார்ந்த பேட்ச்வால்
– வைபை 802.11 a/b/g/n 2X2, ப்ளூடூத் 4.0, Mi போர்ட்
– 3 x HDMI 2.0, AV, 1 x USB 2.0 x 1, USB 3.0 x 1
2x 8W டால்பி ஆடியோ ஸ்பீக்கர், DTS-HD

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :