Thomson நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் பிரபல நிறுவனமாக அறியப்படும் தாம்சன் தனது புதிய ஸ்மார்ட் டி.வி.UD9 என அழைக்கிறது. 40-இன்ச் அளவில் கிடைக்கும் புதிய 4K ஸ்மார்ட் டி.வி. மார்ச் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் வெப்சைட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய தாம்சன் UD9 40-இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முதல் 4K (3840×2160 பிக்சல்) கொண்ட முதல் ஸ்மார்ட் டி.வி.யாகும். புதிய ஸ்மார்ட் டி.வி.யில் HDR10 மற்றும் 20W ஆடியோ அவுட்புட் வழங்குகிறது. இந்த எல்.இ.டி. டி.வி.யில் மூன்று HD .MI போர்ட்கள் மற்றும் 60Hz ஸ்டான்டர்டு ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட் டி.வி. அம்சத்திற்கென ஆறு செயலிகல் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் யூடியூப் செயலியும் அடங்கும். இந்த செயலியை கொண்டு 4K வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த டி.வி.யின் பிரைட்னஸ் ரேட்டிங் 550 நிட்ஸ் ஆகும். கூடுதலாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவையும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.
விலை தகவல்
இதன் விலை இந்தியாவில் ரூ.20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப்-எண்ட் டி.வியின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தாம்சன் டி.வி.க்களை விற்பனை செய்து வரும் எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் 1990 முதல் சந்தையில் பல்வேறு ரக டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.