TCL நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவியை S சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிசிஎல் S5400, S5400A, S5403A உள்ளிட்ட மாடல்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன. இத்துடன் பெசல்-லெஸ் டிசைன், 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான மெமரி, ஆண்ட்ராய்டு டிவி இண்டர்ஃபேஸ் கொண்டுள்ளன.
TCL S5400 கூகுள் டிவியின் விலை ரூ. 15,990 ஆகவும், S5400A மற்றும் S5403A முறையே ரூ.13,490 மற்றும் ரூ.13,990-லிருந்து தொடங்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TCL இன் கூகுள் டிவி அமேசானில் கிடைக்கிறது, மற்ற இரண்டு ஆண்ட்ராய்டு டிவிகள் ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கின்றன.
புதிய டிசிஎல் S5400 மாடலில் 32 இன்ச் FHD ஸ்கிரீன், HDR10 சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் கூகுள் டிவி இண்டர்ஃபேஸ் உள்ளது. இதை கொண்டு பயனர்கள் புதிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை தங்களின் சந்தா முறை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப கண்டுகளிக்க முடியும். இத்துடன் கூகுள் வாட்ச்லிஸ்ட் கொண்டு தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை லைப்ரரியில் சேர்த்துக் கொள்ளலாம்.
இவை தவிர கூகுள் கிட்ஸ் மோட், க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. டிசிஎல் S5400A மற்றும் S5403A மாடல்கள் 32 இன்ச் HD ரெடி ஸ்கிரீன் மற்றும் HDR10 சப்போர்ட் கொண்டிருக்கின்றன. இந்த மாடல்களில் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ், 7 ஆயிரத்திற்கும் அதிக ஆப்ஸ்களை இயக்கும் வசதி, 7 லட்சத்திற்கும் அதிக நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கும் வசதி உள்ளன.
இரு மாடல்களிலும் மைக்ரோ டிம்மிங் அம்சம் உள்ளது. இது டிவியின் பிரைட்னஸ் மற்றும் டார்க்னசை தானாக இயக்கிக் கொள்ளும். புதிய டிசிஎல் டிவிக்களில் ப்ளூடூத் 5.0, வைபை, HDMI x2, யுஎஸ்பி 2.-0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கின்றன