TCL 4 QD-Mini LED 4K TV,யின் நான்கு மாடல் அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க

Updated on 17-Dec-2024

TCL அதன் T6L என்ற பெயரில் லேட்டஸ்ட் QD-Mini LED TV சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது, இந்தத் சீரிஸ் கீழ் நான்கு ஸ்க்ரீன் சைஸ்கள் உள்ளன – 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச். அனைத்து மாடல்களும் 4K ரேசளுசனுடன் வருகின்றன. அவை 1300 நிட்கள் வரை ஹை ப்ரைட்னஸ் வழங்குகின்றன, மேலும் நான்கு மாடல்களும் குவாண்டம் டாட் ப்ரோ 2025 தொழில்நுட்பத்துடன் வந்துள்ளன,

இது வைப்ரேட் கலர்களையும் தொழில்முறை தர துல்லியத்தையும் வழங்குவதாகக் கூறுகிறது. புதிய T6L சீரிஸ் அதன் சொந்த வளர்ந்த கோர் அக்ரிகேட்டட் லைட் சிப்புடன் வருகிறது, இது சிறந்த ப்ரைட்னாஸ் நிலைகளை வழங்கும் போது பர்போமன்சை கவனித்துக் கொள்கிறது.

TCL T6L Series விலை மற்றும் விற்பனை.

TCL T6L சீரிஸின் நான்கு ஸ்க்ரீன் சைஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த சீரிஸின் யில் 55 இன்ச் மாடலின் விலை 2,899 யுவான் (சுமார் ரூ. 33,800). இதன் 65 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் 3,699 யுவான் (சுமார் ரூ.43,100) ஆகும்.

75 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் 4,799 யுவான் (தோராயமாக ரூ. 56,000) மற்றும் 85 இன்ச் மாடல் 6,199 யுவான் (தோராயமாக ரூ. 72,200) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடல்களும் JD.com யில் வாங்குவதற்கு கிடைக்கின்றன.

TCL T6L Series சிறப்பம்சம்.

TCL T6L தொடரின் அனைத்து மாடல்களும் 4K ரெசளுசன் மற்றும் 420 லோக்கல் டிம்மிங் மண்டலங்களுடன் மேம்பட்ட QD-Mini LED தொழில்நுட்பத்தை வழங்குகின்றன. அவை குவாண்டம் டாட் ப்ரோ 2025 தொழில்நுட்பத்துடன் வருகின்றன, இது 1300 நிட்கள் ஹை XDR ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது , வைப்ரேட் , தெளிவான கலர் மற்றும் 96% DCI-P3 கலர் ரேன்ஜ் தொழில்முறை தர துல்லியமாக வழங்குகிறது. இந்த டிவிகளில் TCL அதன் ப்ரைவசி கோர் கோர் அக்ரிகேட்டட் லைட் சிப்பை வழங்கியுள்ளது, இது பிரகாசத்தை 53.8% அதிகரிக்கச் செய்வதோடு, பவர் எபிசியன்சில் 10% முன்னேற்றத்தையும் கொண்டுள்ளது.

T6L சீரிஸ் அனைத்து ஸ்க்ரீன் சைஸ்கள், 4 HDMI 2.1 போர்ட்கள், 2 USB போர்ட்கள் மற்றும் eARC ஆகியவற்றிற்கான சப்போர்டுடன் வருகிறது. இவை குவாட் கோர் A73 ப்ரோசெசறை கொண்டுள்ளன, இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டிவிக்கள் TCL Lingkong சிஸ்டம் 3.0 யில் இயங்குகின்றன. இந்த மாதிரிகள் 288Hz வரை ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:Daiwa யின் இரண்டு ஸ்மார்ட்டிவி வெறும் ரூ,7,499 யில் இந்தியாவில் அறிமுகம், இதன் அம்சங்கள் பார்த்தா அசந்து போவிங்க

T6LTV சீரிஸ் சப்வூபர் கூடிய 2.1-சேனல் Onkyo Hi-Fi சவுண்ட் அமைப்புடன் வருகிறது. மாடல்கள் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் சான்றிதழுடன் வருகின்றன. இவை TCL இன் Fuxi AI லார்ஜ் மாடலையும் ஒருங்கிணைக்கிறது, இது மேம்பட்ட AI-பவர்ட் அல்காரிதம்கள் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ தரத்தை மேம்படுத்துவதாகக் கூறுகிறது.

source

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :