TCL அறிமுகம் செய்தது 65 இன்ச் வரையிலான 4 புதிய 4K QLED டிவி அறிமுகம்

Updated on 27-Jun-2024
HIGHLIGHTS

TCL இந்தியாவில் ஒன்றுக்கு பிறகு ஒன்று புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சி மாடலை அறிமுகம் செய்கிறது

இப்போது அதன் புதிய C61B 4K QLED Google TV ரேஞ்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

அதில் - 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஆகியவை அடங்கும்

TCL இந்தியாவில் ஒன்றுக்கு பிறகு ஒன்று புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சி மாடலை அறிமுகம் செய்கிறது சமீபத்தில் P-சீரிஸ், S-சீரிஸ் மற்றும் C-சீரிஸின் சில மாடல்களை அறிமுகப்படுத்திய பிறகு, நிறுவனம் இப்போது அதன் புதிய C61B 4K QLED Google TV ரேஞ்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரேஞ்சில் 4 சைஸ் இருக்கிறது அதில் – 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஆகியவை அடங்கும். அனைத்தும் HDR10+ ஆதரவுடன் T-SCREEN Pro தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. சிறந்த படத் தரத்திற்கு AiPQ Pro ப்ரோசெசர் உள்ளது. சீரிஸின் அனைத்து ஸ்க்ரீன் சைஸ் மாடல்களும் DTS மெய்நிகர் சரவுண்ட் சவுண்ட் ஆதரவுடன் ONKYO 2.1 சேனல் சப் வூபார் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில், கூகுள் டிவி OTT பிளாட்பாரம் கூகுள் மீட் மற்றும் கூகுள் கிட்ஸ் போன்ற கூகுள் சேவைகள் பில்ட் in கிடைக்கின்றன.

TCL 4K QLED Google TV யின் விலை

புதிய TCL C61B 4K QLED Google TV தொடர் இந்தியாவில் நான்கு ஸ்க்ரீன் சைஸ் களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 43 இன்ச் மாடலின் விலை ரூ.32,990 ஆகவும், 50 இன்ச் மாடலின் விலை ரூ.37,990 ஆகவும், 55 இன்ச் மாடலின் விலை ரூ.45,990 ஆகவும், அதிக விலை கொண்ட 65 இன்ச் மாடலின் விலை ரூ.72,990 ஆகவும் உள்ளது. அனைத்து மாடல்களும் அமேசான் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கின்றன.

TCL 4K QLED Google TV யின் சிறப்பம்சம்

TCL 4K QLED Google TV யின் சிறப்பம்சம் பற்றி பேசினால் TCL C61B சீரிஸ் யின் அனைத்து மாடல் 4K QLED Google TV இருக்கிறது C61B சீரிஸில் QLED Pro யின் அடிபடையின் கீழ் வழங்குகிறது AiPQ ப்ரோ செயலி, HDR10+ மற்றும் T-SCREEN ப்ரோ தொழில்நுட்பம் ஆகியவை இணைந்து ஒளிவட்ட விளைவு இல்லாமல் மாறுபாட்டை மேம்படுத்துவதாகவும் பரந்த கோணங்களை வழங்குவதாகவும் கூறுகின்றன. இது 93% DCI-P3 வண்ண வரம்பு, 3840 x 2160 ரேசளுசன் மற்றும் MEMC ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 43-இன்ச் மற்றும் 50-இன்ச் மாடல்கள் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளன, அதே சமயம் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்கள் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை வழங்குகின்றன. 600 நிட்களின் ப்ரைட்னாஸ் , இந்தத் சீரிஸ் Dolby Vision மற்றும் HLG சப்போர்ட் செய்கிறது

#TCL-4K-QLED-Google-TV-1.jpg

புதிய TCL TV சீரிஸ் DTS Virtual மற்றும் Dolby Atmos யின் உடன் ONKYO 2.1ch சப்வூபர் வழங்கப்படுகிறது இதில் ஆடியோ அவுட்புட் 43 இன்ச் மற்றும் 50 இன்ச் மாடல்களுக்கு 30W ஆகவும், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களுக்கு 35W ஆகவும் இருக்கும். C61B சீரிச்ன் அனைத்து மாடல்களிலும் உள்ள கனெக்டிவிட்டி விருப்பங்களில் புளூடூத் v5.0, Wi-Fi 5, மூன்று HDMI போர்ட்கள் மற்றும் ஒரு USB போர்ட் ஆகியவை அடங்கும். AiPQ Pro ப்ரோசெசர் 2GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது சிறந்த பர்போம்ன்ஸ் மற்றும் பாஸ்ட் ரிப்ளை உறுதி செய்கிறது. சிறந்த கேமிங் டிஸ்ப்ளே மற்றும் பர்போம்சுக்காக கேமர்கள் 120Hz கேம் ஆக்ஸிலரேட்டர், கேம் மாஸ்டர் மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Google TV OS மூலம், பயனர்கள் OTT இயங்குதளங்கள், Google Meet மற்றும் Google Kids மற்றும் Google Watchlist போன்ற Google சேவைகளை நேரடியாக அணுகலாம். ஹேண்ட்ஸ்-ஃப்ரீ குரல் கட்டுப்பாடு மற்றும் உள்ளமைக்கப்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இந்தத் சீரிஸில் TCL Home, Video Chat, Miracast மற்றும் Quick Settings போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.

இதையும் படிங்க: Nokia அதிரடி என்ட்ரி, பழைய நினைவுகளை நமக்கு நினைவூட்டும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :