சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய OLED டிவி மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் ஏஹெச்8 என அழைக்கப்படுகிறது. இது 4கே ஹெச்டிர் ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும்.
சோனி A8H ஆண்ட்ராய்டு டிவி
சோனியின் புதிய எக்ஸ்1 அல்டிமேட் பிராசஸர் முந்தைய எக்ஸ்1 எக்ஸ்டிரீம் பிராசஸரை விட இருமடங்கு வேகமாக செயல்படுகிறது. இது 4கே ரெசல்யூஷன் படங்களை அதன் உண்மை தரத்தில் பிரதிபலிக்கும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய சோனி ஸ்மார்ட் டிவி எக்ஸ்1 அல்டிமேட் இமேஜ் பிராசஸர், பிக்சல் காண்டிராஸ்ட் பூஸ்டர் தொழில்நுட்பம், TRILUMINOS பேனல், அகௌஸ்டிக் சர்பேஸ் ஆடியோ, அலெக்சா, ஆப்பிள் ஏர்பிளே மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த டிவியில் உள்ள அகௌஸ்டிக் சர்பேஸ் ஆடியோ தொழில்நுட்பம் ஸ்கிரீனையே ஸ்பீக்கராக பயன்படுத்துகிறது. மேலும் இதில் டால்பி அட்மோஸ், எஸ் போர்ஸ் முன்புற சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இது டிவி வைக்கப்பட்டு இருக்கும் சூழலை அறிந்து ஆடியோ மற்றும் படங்களை சரியாக ஒளிபரப்புகிறது.
புதிய சோனி டிவி மாடலில் ஆண்ட்ராய்டு டிவி, ஆப்பிள் ஏர்பிளே 2, ஹோம்கிட், கூகுள் அசிஸ்டண்ட், நெட்ப்ளிக்ஸ் கலிபரேட்டெட் மோட், டால்பி விஷன் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சோனி ஏ8ஹெச் மாடல் 65 இன்ச் மாடல் விலை ரூ. 3,39,900 ஆகும். எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சோனி ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்தில் ரூ. 2,79,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 55 இன்ச் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.