சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரேவியா XR A80J OLED 4K டிவியை அறிமுகம் செய்தது. 65-இன்ச் அளவில் கிடைக்கும் புதிய சோனி ஸ்மார்ட் டிவி காக்னிடிவ் பிராசஸர் XR கொண்டிருக்கிறது. இது sound-from-picture ரியாலிட்டி வசதி கொண்டுள்ளது. இது சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இத்துடன் பிரத்யேக கேம் மோட் உள்ளது. இது HDMI 2.0, 4K 120fps வீடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் XR OLED contrast, XR டிரைலுமினஸ் ப்ரோ மற்றும் XR மோஷன் கிளாரிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய பிரேவியா டிவி டால்பி விஷன், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய Bravia XR cognitive ப்ரோசெசர் ஸ்க்ரீனை பல மண்டலங்களாகப் பிரித்து வண்ணம், மாறுபாடு மற்றும் விவரங்களை ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்கிறது மற்றும் ஒவ்வொரு உறுப்பு சிறந்த மதிப்புடன் சரிசெய்யப்படுகிறது. கூறுகளை தனித்தனியாக கண்டறிந்து பகுப்பாய்வு செய்வதால் பாரம்பரிய AI க்கள் அடைய முடியாத ஒன்று இது. இது எக்ஸ்ஆர் ஓஎல்இடி கான்ட்ராஸ்ட், எக்ஸ்ஆர் ட்ரிலுமினோஸ் புரோ, எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி, எக்ஸ்ஆர் சவுண்ட் பொசிஷன் தொழில்நுட்பம் மற்றும் பல அம்சங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சோனி பிரேவியா XR A80J OLED டிவி XR-65A80J எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதன் 65-இன்ச் மாடல் விலை ரூ. 2,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இதே சீரிசில் 77-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்களை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.