Sony BRAVIA வின் இந்த டிவி ரூ. 1.39 லட்சம்விலையில் அறிமுகம், அப்படி என்ன இருக்கு தெரிஞ்சிக்கோங்க.
சோனி நிறுவனம் 2021 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காக்னிடிவ் பிராசஸர் XR-ஐ அறிமுகம் செய்தது
புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச், 65 மற்றும் 75-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.
இந்த டிவியில் ஃபுல் அரே பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளது
சோனி நிறுவனம் 2021 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காக்னிடிவ் பிராசஸர் XR-ஐ அறிமுகம் செய்தது. தற்போது இந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச், 65 மற்றும் 75-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.
மேலும் இதில் மினி-ஏவி போக்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஹெட்போன் அவுட், ஆப்டிக்கல் அவுட், வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் IMAX மோட் உள்ளது. இதில் உள்ள லைட் சென்சார்கள் அறையில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப பிக்சர் செட்டிங்களை மாற்றியமைக்கும்.
இந்த டிவியில் ஃபுல் அரே பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளது. இதில் உள்ள 4K பேனல் HDR10, டால்பி விஷன் மற்றும் HLG உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்குகிறது. இந்த டிவியில் மொத்தம் நான்கு HDMI போர்ட்கள் உள்ளன.
புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச் விலை ரூ. 1,39,990 ஆகும். இதன் விற்பனை இன்று (ஜூன் 10) துவங்கியது. 65 மற்றும் 75 இன்ச் வேரியண்ட்களின் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile