Skyworth நிறுவனம் இந்தியாவில் ரூ.12,999 விலையில் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்துள்ளது..!
புதிய M20 சீரிஸ் 43 இன்ச் மாடலில் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே 1920×1080 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது
சீன நிறுவனமான ஸ்கைவொர்த் இந்தியாவில் M 20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் LED .டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. M 20 சீரிஸ் 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் இன்பில்ட் கேம், wifi , லைவ் டிவி ஆப்ஸ், நெட் ரேன்ஜ் ஆப் ஸ்டோர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. சீரிஸ் DTS சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், சிறப்பான ஆடியோ அனுபவம் கிடைக்கும். கூடுதலாக பயனர் விருப்பப்படி தேர்வு செய்ய பல்வேறு பிக்சர் மற்றும் ஆடியோ மோட் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 49-இன்ச் மாடலை தவிர்த்து 32 மற்றும் 43-இன்ச் மாடல்களில் ஐ.பி.எஸ். பேனல் கொண்ட ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கைவொர்த் எம்20 சீரிஸ் பேஸ் மாடலாக இருக்கும் 32-இன்ச் டி.வி.யில் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே, 1366×768 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள், குவாட்-கோர் பிராசஸர் மற்றும் டூயல்-கோர் கிராஃபிக்ஸ் பிராசஸர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய M20 சீரிஸ் 43 இன்ச் மாடலில் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே 1920×1080 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. இறுதியில் 49-இன்ச் மாடலிலும் ஃபுல் ஹெச்.டி. 1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 2 ஹெச்.டி.எம்.ஐ., 2 யு.எஸ்.பி. மற்றும் ஒரு வி.ஜி.ஏ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஆப் ஸ்டோர் மற்றும் ஏ.பி.கே. செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி 32-இன்ச் வேரியன்ட் விலை ரூ.12,999, 43-இன்ச் வேரியன்ட் ரூ.22,999 மற்றும் 49-இன்ச் வேரியன்ட் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் மூன்று டி.வி. மாடல்களையும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile