நொய்டாவை சேர்ந்த டி.வி. மேனிபெக்ஜரர் ஷின்கோ குறைந்த விலையில் புதிதாக 32-இன்ச் ஸ்மார்ட் LED டி.வி.யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டி.வி.யில் யுனிவால் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த யு.ஐ. கிளவுட் டி.வி. சான்று பெற்ற AOSP மூலம் இயங்குகிறது.
Shinco 32-இன்ச் ஸ்மார்ட் LED . டி.வி.
இத்துடன் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட், சன் நெக்ஸ்ட், ஜியோ சினிமா, இரோஸ் நௌ, ஹங்காமா பிளே, ஆல்ட் பாலாஜி, மூவி பாக்ஸ், புளூம்பெர்க் குவின்ட், தி குவின்ட், ஹோம்வேதா போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு இரண்டு HDMI போர்ட்கள், இரு USB ராய்டு 7.0 & 8.0 இயங்குதளங்களை சார்ந்து இயங்குகிறது. இதில் உள்ள இ-ஷேர் அம்சம் கொண்டு ஸ்மார்ட்போன் டேட்டாக்களை டி.வி.யில் பகிர்ந்து கொள்ள முடியும்.
ஷின்கோ 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. ஏ பிளஸ் கிரேடு பேனல் 1366×768 ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த பேனலில் 1.67 கோடி நிறங்களை HRDP தொழில்நுட்பம் மற்றும் 20 வாட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு டி.வி. குவாட் கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை
அமேசான் இந்தியாவுடன் இணைந்து வெளியாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஷின்கோ 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது விற்பனை நடைபெற இருக்கிறது. புதிய ஸ்மார்ட் LED. டி.வி. மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.