SENS அறிமுகம் செய்தது புதிதாக மேட் இன் இந்தியா ஸ்மார்ட்டிவி.

SENS  அறிமுகம் செய்தது புதிதாக மேட் இன் இந்தியா ஸ்மார்ட்டிவி.
HIGHLIGHTS

ன்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்கி இருக்கிறது

புதிய "மேட் இன் இந்தியா" ஸ்மார்ட் டிவி மாடல்களை செனஅஸ் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அறிமுகம் செய்துள்ளது

சென்ஸ் பிகாசோ 50 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவி மாடல்களின் விலை அறிமுக சலுகையாக முறையே ரூ. 24 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேட் இன் இந்தியா ஸ்மார்ட்வாட்ச், ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் நெக்பேண்ட் ஹெட்செட்களை அறிமுகம் செய்து வரும் சென்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்கி இருக்கிறது. முதற்கட்டமாக ஏழு புதிய "மேட் இன் இந்தியா" ஸ்மார்ட் டிவி மாடல்களை செனஅஸ் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அறிமுகம் செய்துள்ளது. இவை நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் உள்ள உற்பத்தி ஆலைகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

சென்ஸ் பிகாசோ 50 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவி மாடல்களின் விலை அறிமுக சலுகையாக முறையே ரூ. 24 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்ஸ் டாவின்சி சீரிஸ் 55 இன்ச் மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்ஸ் 32 இன்ச் HD, 43 இன்ச் FHD மற்றும் 43 இன்ச் 4K டிவி மாடல்களின் விலை முறையே ரூ. 9 ஆயிரத்து 999, ரூ. 16 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை அறிமுக சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

சென்ஸ் ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்.

புதிய ஸ்மார்ட் டிவிக்களில் சென்ஸ் நிறுவனத்தின் லுமிசென்ஸ் மற்றும் ஃபுளோரோசென்ஸ் டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை 43 இன்ச் துவங்கி அதிகபட்சம் 65 இன்ச் வரையிலான பேனல் அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் கூகுள் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் தங்களின் குழந்தைகளுக்காக "கிட்ஸ்" ப்ரோஃபைலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மற்ற சென்ஸ் சாதனங்களை போன்றே புதிய டிவிக்களும் இந்தியா மற்றும் அமெரிக்காவை சார்ந்த சென்ஸ் நிறுவன ஊழியர்களாலேயே டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட் டிவி மாடல்கள் பிரபல ஒவியர்களான டாவின்சி மற்றும் பிகாசோவை தழுவி பெயரிடப்பட்டுள்ளன.

சென்ஸ் டாவின்சி 55 இன்ச், 65 இன்ச் 4K QLED கூகுள் டிவி அம்சங்கள்: 

55 / 65 இன்ச் 3840×2160 பிக்சல் QLED டிஸ்ப்ளே 
HDR10, டால்பி விஷன், பெசல் லெஸ் டிசைன் 
குவாட்கோர் பிராசஸர் மாலி G52 GPU 
2 ஜிபி ரேம் 16 ஜிபி மெமரி 
கூகுள் டிவி 
டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2
3x HDMI, 2x USB, 1x ஈத்தர்நெட், 1x ஆப்டிக்கல் போர்ட் 
நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, 
யூடியூப் ஹாட்கி கொண்ட ரிமோட் 
20 வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ்

சென்ஸ் பிகாசோ 50 இன்ச், 55 இன்ச் 4K UHD ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள்:

50 / 55 இன்ச் 3840×2160 பிக்சல் LED டிஸ்ப்ளே 
HDR10, புளுரோசென்ஸ் பேனல் 
குவாட்கோர் A53 பிராசஸர் 
2 ஜிபி ரேம் 16 ஜிபி மெமரி 
ஆண்ட்ராய்டு டிவி டூயல் பேண்ட் 
வைபை, ப்ளூடூத் 5.2
 3x HDMI, 2x USB, 1x ஈத்தர்நெட், 1x ஆப்டிக்கல் போர்ட் 
நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ,
 யூடியூப் ஹாட்கி கொண்ட ரிமோட்
20 வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ, டிடிஎஸ்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo