கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போன்கள் மிகவும் குறைந்த விலையில் அதிக சந்தையில் திறக்கப்பட்டுள்ளது, அதனை தொடர்ந்து Xiaomi நிறுவனம் வரிசையாக பல ஸ்மார்ட் டிவி அறிமுகப்படுத்தியது அதும் அசத்தலான அம்சங்களுடன் இறக்கப்பட்டதை தொடர்ந்து, இப்பொழுது டெல்லியை சார்ந்த ஒரு நிறுவனம் Samy Informatics அதன் மிகவும் குறைந்த விலையில் டிவி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது அதாவது அது வெறும் Rs 5,000க்கு வைக்கப்பட்டுள்ளது
Samy SM32-K5500 யின் இந்த டிவி யின் விலையை பற்றி பேசினால் இது Rs 4,999 யில் அறிமுகமானது. இருப்பினும் இதனுடன் இதில் 18 சதவிதம் GST மற்றும் 1,800 ஷிப்பிங் சார்ஜ் அதன் பிறகு இதன் விலை 8,022ரூபாயாக ஆகிவிடுகிறது. இதனுடன் டெல்லி பயனர்களுக்கு ஷிப்பிங் சார்ஜ் Rs 1,500 வைக்கப்பட்டுள்ளது அதன் பிறகு அவர்களுக்கு Rs 7,398 விலயில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் செய்யப்பட இந்த டிவி 32 இன்ச் LED டிஸ்பிளே கொண்டுள்ளது. இதனுடன் இதன் ரெஸலுசன் 1366×786 பிக்சல் HD ரெஸலுசனுடன் வருகிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 16:9 இருக்கிறது
இந்த டிவி ஆண்ட்ராய்டு OS (4.4 KitKat) யில் இயங்குகிறது மற்றும் இதில் யூடியூப்,பேஸ்புக் மற்றும் பல ஆப் உடன் அடங்கியுள்ளது. இதனுடன் இந்த டிவியில் 4GB ஸ்டோரேஜ் மற்றும் 512MB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த டிவி யின் விலையை பற்றி பேசினால் Rs 4,999 ரூபாயாக வைக்கப்பட்டது, ஆனால் அது வெறும் சந்தையில் காமிப்பதற்க்கு மட்டும் தான், ஏன் என்றால் , இதன் முடிவில் கூடுதலாக பணத்தை சேர்த்து 8,022ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது., இருப்பினும் ஒரு ஆண்ட்ராய்டு டிவி இந்த விலையில் கிடைத்து விடுவதில்லை, அப்படி இதை வாங்க வேண்டும் என்றால் இதை எங்கே வாங்குவது ஆன்லைனில் வாங்கலாமா உதாரணத்துக்கு பிலிப்கார்ட் , அமேசான் போன்ற வெப்சைட்களில் என்றால் அது இல்லை , ஏன் என்றால் இந்த டிவியை நீங்கள் வெறும் Samy ஆப் மூலம் மட்டுமே வாங்க முடியும். அந்த ஆப் வெறும் ஆண்ட்ராய்டு தளங்களில் மட்டுமே கிடைக்கிறது, அது மட்டுமில்லலாமல் இந்த ஆப் நீங்கள் டவுன்லோடு செய்வதற்க்கு உங்களின் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டை லிங்க் செய்ய வேண்டி இருக்கும்
நாம் சுப்ரிம் கோர்ட் ஆர்டர் படி பார்த்தல் ஆதார் நம்பரை வைத்து பயனர்களின் சொந்த தகவலை திருடப்படுவதால் உச்ச நீதி மன்றம் தங்களின் ஆதார் நம்பர் தகவலை எந்த இடத்திலும் ஷேர் செய்யக்கூடாது என்று உத்தரவு கொடுத்துத்தது, ஆனால் அதையும் தாண்டி Samy டிவி வாங்குவதற்கு ஏன் ஆதார் தகவலை கேக்குறார்கள், அதனால் மக்கள் இதை வாங்க நினைத்தால் சற்று சித்தித்து பார்க்க வேண்டும் ஏன் என்றால் ஆதார் தகவலை இது போன்ற பொது இடத்தில் ஷேர் செய்யக்கூடாது, இதனுடன் இந்த நிறுவனத்திற்கு சர்விஸ் சென்டர் இருக்கிறதா அல்லது இல்லையா என்றால் அதும் இல்லை