Samsung யின் Unbox Magic Smart TV இந்தியாவில் ஆரம்ப விலை 24,900ரூபாயில் அறிமுகமானது.

Updated on 09-Apr-2019
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அன்பாக்ஸ் மேஜிக் சீரிஸ் மாடலின் கீழ் அறிமுகமாகி இருக்கும்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அன்பாக்ஸ் மேஜிக் சீரிஸ் மாடலின் கீழ் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பெர்சனல் கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், ஹோம் கிளவுட், லைவ் காஸ்ட் மற்றும் டு-வே ஷேரிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் விலை ரூ.24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் அதிகபட்சம் 82-இன்ச் வரை கிடைக்கிறது. 

புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் இதுவரை சாம்சங் தனது டி.வி.க்களில் வழங்கிடாத வசதிகளை வழங்கியிருப்பதால் பயனருக்கு முற்றிலும் புதுவித அனுபவம் கிடைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இவை ஹை டெஃபனிஷன் டிஸ்ப்ளேக்களில் அல்ட்ரா பிக்ஸ் தொழில்நுட்பம் முதல் அல்ட்ரா ஹை டெஃபனிஷன் 4K மாடல்களில் கிடைக்கிறது. 

புதிய ஸ்மார்ட் டி.வி. முழு கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம். இதனால் பிரவுசிங் மட்டுமின்றி கிளவுட் சேவையில் இருந்து நேரடியாக டாக்யூமென்ட்களை உருவாக்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இத்துடன் லேப்டாப்பை ஸ்மார்ட் டி.வி.யில் இன்டர்நெட் வசதியின்றி வயர்லெஸ் முறையில் மிரர் செய்யலாம்.

மியூசிக் சிஸ்டம்: இந்த வசதியை கொண்டு டி.வி.யை விர்ச்சுவல் மியூசிக் சிஸ்டம் போன்று பயன்படுத்தலாம். இதனுடன் தனியே ஸ்பீக்கர் இணைத்து ஆடியோ அனுபவத்தை மேலும் மேம்படுத்தலாம். 

இத்துடன் ஹோம் கிளவுட் சேவையை கொண்டு ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வயர்லெஸ் முறையில் இணைய வசதியின்றி  டி.வி.யில் இருக்கும் யு.எஸ்.பி. டிரைவில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி புதிய ஸ்மார்ட் டி.வி.யில் லைவ் காஸ்ட், சாம்சங் ஸ்மார்ட் ஹப் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :