CES2019 யில் சாம்சங் அறிமுகப்படுத்தியது 219 இன்ச் கொண்ட புதிய TV; அடேங்கப்பா இம்புட்டு பெரிய டிவியா.!
புதிய 219 இன்ச் வால் மைக்ரோ LED . தொழில்நுட்பத்தில் சாம்சங் தன்னால் முடிந்தவற்றை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்சிருக்கிறது.
சாம்சங் நிறுவனம் சர்வதேச (CES . 2019) விழாவில் புதிய டிவி அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் CES . 2019 விழாவில் சாம்சங் சிறிய அளவில் துவங்கி, பெரிய அளவுகளில் மைக்ரோ LED . மாட்யூலர் பேனல்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய 219 இன்ச் வால் மைக்ரோ LED . தொழில்நுட்பத்தில் சாம்சங் தன்னால் முடிந்தவற்றை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்சிருக்கிறது. இத்துடன் 75 இன்ச் அளவில் சாம்சங் சிறிய ரக மைக்ரோ எல்.இ.டி. பேனல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. 75 இன்ச் பேனலில் 4K வசதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தி வால் என்ற பெயரில் 219 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் புதிய பேனல்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வசதிகளை வழங்கும். எனினும், இதற்கு உங்களிடம் இந்த வசதிகளை சப்போர்ட் செய்யும் ஸ்பீக்கர் இருக்க வேண்டும்.
இதன் மூலம் பயனர்கள் டி.வி.யின் அடிப்படை அம்சங்களை வொய்ஸ் மூலமாகவே இயக்க முடியும். ஒருவேளை ஸ்மார்ட் ஸ்பீக்கர் இல்லாத பட்சத்தில் டி.வி.யில் பில்ட்-இன் பிக்ஸ்பி மூலம் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.
ஐடியூன்ஸ் மூலம் திரைப்படங்களை வழங்குவதுடன், ஸ்மார்ட் டி.வி. ஆப் மூலம் டிவி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா உள்ளிட்டவற்றுக்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile