Samsung TV யூசரா நீங்கள் மார்ச் 1 முதல் Smart Tv யில் இந்த அம்சம் வேலை செய்யாது

Samsung TV யூசரா நீங்கள் மார்ச் 1 முதல் Smart Tv யில் இந்த அம்சம் வேலை செய்யாது
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் டிவியில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது .

இப்போது ஸ்மார்ட் டிவியில் இருந்து கூகுள் அசிஸ்டண்ட் அகற்றப்படும்

இந்த தகவலை நிறுவனம் தனது சப்போர்ட் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது

Samsung நிறுவனம் ஸ்மார்ட் டிவியில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது . இப்போது ஸ்மார்ட் டிவியில் இருந்து கூகுள் அசிஸ்டண்ட் அகற்றப்படும். இந்த தகவலை நிறுவனம் தனது சப்போர்ட் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் முதல் சாம்சங் ஸ்மார்ட் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட் கிடைக்காது என்று கூறப்படுகிறது. பழைய மாடல்களில் இருந்து கூகுள் அசிஸ்டண்ட் அகற்றப்படுவது மட்டுமல்லாமல், இனி வரவிருக்கும் புதிய மாடல்களிலும் இந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் பார்க்கப்படாது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் என்ன காரணம் என்பதை தெளிவாக பார்க்கலாம்

Samsung எந்த எந்த Smart TV யில் வேலை செய்யாது.

Samsung ஸ்மார்ட் டிவியில் கூகுளின் வொய்ஸ் அசிஸ்டன்ட் Google Assistant சப்போர்ட் கிடைக்காது, ஸ்மார்ட் டிவியில் இருந்து ஆப்ஸ் அகற்றப்படுகிறது. இந்த தகவலை சாம்சங் Support பக்கத்தில் கொடுத்துள்ளது. மார்ச் 1, 2024 முதல் எந்த Samsung TV மாடலிலும் இந்த அம்சம் கிடைக்காது. 2020 Lifestyle TV, 2020 Crystal UHD TV, 2020 8K and 4K QLED TV, 2021, 2021 ஸ்மார்ட் டிவி மாடல், 2022 ஸ்மார்ட் டிவி மாடல் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இதில் அடங்கும்.

Samsung Tv
Samsung Tv

சாம்சங்கின் 2020 அதன் டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் யின் சப்போர்ட் தர ஆரம்பித்தது, இப்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அம்சம் டிவியில் இருந்து நீக்கப்படுகிறது. கூகுளின் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இது செய்யப்படுகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், பாலிசியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய விரிவான தகவல்களை Samsung நிறுவனம் இதுவரை வழங்கவில்லை, இதன் காரணமாக இந்த அம்சம் இப்போது நீக்கப்படுகிறது. நிறுவனம் ஆதரவு பக்கத்தில், ‘கூகுள் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, மார்ச் 1, 2024 முதல் சாம்சங் ஸ்மார்ட் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட் கிடைக்காது. வொய்ஸ் அசிஸ்டன்ட் பிற விருப்பங்களை டிவியில் பார்க்கவும்.

இதையும் படிங்க: Lava Yuva 3 ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரியுடன் அறிமுகம்

Google Assistant தொடர்பான சமீபத்திய அறிக்கையில், கூகுள் அசிஸ்டண்ட்டிலிருந்து 17 அம்சங்கள் அகற்றப்பட்டதாகச் சொன்னோம். ஜனவரி 26 முதல், கூகுள் அசிஸ்டண்டில் பல அம்சங்கள் வேலை செய்யாது. கூகுள் உதவியாளரின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அப்டேட்டுக்காக இந்த மாற்றம் செய்யப்படுவதாக நிறுவனம் கூறியிருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo