சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஃபன்பிலீவபிள் சீரிஸ் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 32 இன்ச் ஹெச்.டி. மற்றும் 43 இன்ச் FHD ஸ்மார்ட் டி.வி. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய டி.வி. சீரிஸ் பர்சனல் கம்ப்யூட்டர் மோட், கன்டென்ட் கைடு, மியூசிக் சிஸ்டம், இண்டர்நெட் பிரவுசிங் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது. சாம்சங் ஃபன்பிலீவபிள் சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் இல்லாத வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.
இந்தியாவில் சாம்சங் ஃபன்பிலீவபிள் சீரிஸ் துவக்க விலை ரூ. 12,990 என துவங்குகிறது. புதிய டி.வி.க்கள் இரண்டு வருட வாரண்டியுடன் வருகிறது. இவை சாம்சங் ஸ்மார்ட் பிளாசாக்கள், முன்னணி மின்சாதன விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய டிவி பாப்புலர் ஸ்ட்ரீமிங் ஆப்கல் போன்ற Netflix, Amazon Prime Video, Zee5, SonyLIV மற்றும் VOOT உடன் வருகிறது.மற்ற அம்சங்களை பற்றி பேசினால், இதில் பர்சனல் கம்பியூட்டர் மோட் கொடுக்கப்பட்டுள்ளது.இதன் உதவியால் உங்களின் டிவியை நீங்கள் கம்பியூட்டராக மாற்ற முடியும்.எந்த இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் லேப்டாப் ஸ்க்ரீனை டிவியில் பிரதிபலிக்க முடியும்.
இந்த டிவியில் ஸ்கூல் அல்லது ஆபிஸ் ப்ரொஜெக்ட்களை உருவாக்க பயனர்களுக்கு க்ளவுட் ஆதரவும் கிடைக்கும். டிவியில் தொலைநிலை அணுகல் அம்சம் உள்ளது, இதனால் டிவி அல்லது தனிப்பட்ட கம்பியூட்டரை இணையத்தில் கட்டுப்படுத்த முடியும். புதிய டிவி தொடரில் 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் அல்லாத டிவியையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.