Samsung Neo QLED 8K டிவி இந்தியாவில் அறிமுகம் விலையை கேட்ட அசந்து போவீங்க.

Updated on 04-May-2023
HIGHLIGHTS

சாம்சங் இந்திய சந்தையில் அதன் டிவியின் புதிய ரேன்ஜ் Samsung Neo QLED 8K மற்றும் Neo QLED 4K டிவியை அறிமுகம் செய்தது.

சாம்சங் யின் குவாண்டம் மேட்ரிக்ஸ் டெக்னோலஜி கொடுக்கப்பட்டுள்ளது

இது 3.3 கோடி பிக்சல்கள் மூலம் 100 கோடி வண்ணங்களை வழங்குகிறது

சாம்சங் இந்திய சந்தையில் அதன் டிவியின் புதிய ரேன்ஜ் Samsung Neo QLED 8K மற்றும் Neo QLED 4K டிவியை அறிமுகம் செய்தது. இந்த டிவி 50 இன்ச் மற்றும் 98 இன்ச் சைசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  இது மிகவும் அற்புதமான டியின் உடன் வருகிறது.

நியோ QLED TV  உடன் உண்மையான பிக்ஜருக்கு சாம்சங் யின் குவாண்டம் மேட்ரிக்ஸ் டெக்னோலஜி கொடுக்கப்பட்டுள்ளது. இது 3.3 கோடி பிக்சல்கள் மூலம் 100 கோடி வண்ணங்களை வழங்குகிறது. நியோ  QLED TV பிகஜார் குவாலிட்டி சாம்சங்கின் மாடர்ன் நியூரல் குவாண்டம் ப்ரோசெசர் வழங்குகிறது  இது குவாண்டம் மினி LED-லைட் டிவியை 14-பிட் ப்ராசஸிங் மற்றும் AI அப்ஸ்கேலிங் உடன் சப்போர்ட் செய்கிறது..

Neo QLED 8K மற்றும் 4K ஆகிய இரண்டு மாடல்களும் பிரகாசமான சிறப்பம்சங்கள் மற்றும் பில்லியன் கணக்கான வண்ணங்களுடன் வருகின்றன, அவை Pantone நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரம் என்பது கன்ஸ்யூமர் தங்களுக்குப் பிடித்த உள்ளடக்கத்தைப் பார்க்கும்போதும் கேம்களை விளையாடும்போதும் நிஜ உலக வண்ணங்களை அனுபவிக்க முடியும். 2,030 Pantone® நிறங்கள் மற்றும் 110 ஸ்கின் நிற நிழல்களின் துல்லியமான வெளிப்பாடு உள்ளது.

இரண்டு டிவிகளிலும் IoT ஆதரிக்கப்படுகிறது, அதாவது இந்த டிவிகள் மூலம் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம். வயர்லெஸ் டால்பி அட்மோஸ் மற்றும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் ப்ரோ ஆகியவை டிவியுடன் கிடைக்கும். இன்பில்ட் அலெக்சா டிவியில் கிடைக்கிறது. இந்த டிவிகள் இன்பினிட்டி ஸ்கிரீன் மற்றும் இன்பினிட்டி ஒன் டிசைனுடன் வருகின்றன, இது பயனர்கள் அந்த மூவி , நிகழ்ச்சி அல்லது கேமை எட்ஜ்-டு-எட்ஜ் 8K படத்துடன் எடுக்க அனுமதிக்கிறது.

நியோ QLED 8K டிவிகள் QN990C (98-inch), QN900C (85-inch), QN800C (75, 65-inch), QN700C (65-inch) மாடல்களில் கிடைக்கின்றன, இதன் விலை ரூ.3,14,990 முதல் தொடங்குகிறது. நியோ QLED 4K TV QN95C (65, 55-inch), QN90C (85-, 75-, 65-, 55-, 50-inch), QN85C (65-, 55-இன்ச்) மாடல்களில் கிடைக்கிறது மற்றும் ரூ. 41,990 ரூபாய் ஆகும்.

இந்த டிவிகள் அனைத்து சாம்சங் ரீடெய்ல் ஸ்டோர்களிலும், முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர்களிலும், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் சாம்சங் ஷாப் உட்பட ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கும். மே 25, 2023க்குள் நியோ  QLED 4K TV வாங்கும் நுகர்வோர், நியோ  QLED 4K  டிவியுடன் INR 99,990 மதிப்புள்ள இலவச HW-Q990 Samsung சவுண்ட்பார் மற்றும் 44,990 ரூபாய் மதிப்புள்ள HW-Q800 Samsung சவுண்ட்பார் ஆகியவற்றைப் வழங்குகிறது..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :