Redmi யின் இரண்டு அசத்தலான TV அறிமுகம் இது பேருக்கு ஏத்தது போல பயராக வேலை செய்யும்

Updated on 16-Sep-2024
HIGHLIGHTS

Xiaomi அதன் Redmi Smart Fire TV அறிமுகம் வரிசைப்படுத்தியுள்ளது இது 43 மற்றும் 55 இன்ச் சைஸ் யில் அறிமுகம் செய்யப்பட்டது

இது 43 மற்றும் 55 இன்ச் சைஸ் யில் அறிமுகம் செய்யப்பட்டது

புதிய Redmi ஸ்மார்ட் டிவிகள் அமேசானின் Fire TV OS யில் இயங்குகின்றன.

Xiaomi அதன் Redmi Smart Fire TV அறிமுகம் வரிசைப்படுத்தியுள்ளது இது 43 மற்றும் 55 இன்ச் சைஸ் யில் அறிமுகம் செய்யப்பட்டது பெயர் குறிப்பிடுவது போல, புதிய Redmi ஸ்மார்ட் டிவிகள் அமேசானின் Fire TV OS யில் இயங்குகின்றன. இந்த டிவியின் ரிமோட்டில் வொயிஸ் அசிஸ்டன்ட் (Alexa) சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் OTT ஆப்கள், ப்ரைம் வீடியோ,Netflix நேரடியான அக்சஸ் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவியில் 4K டிஸ்ப்ளே ,4K HDR சப்போர்ட் வசதி இருக்கிறது, மேலும் இது ப்ரீமியம் டிசைன் வழங்குகிறது

Redmi Smart Fire TV விலை தகவல்

Redmi Smart Fire TV 43 இன்ச் யின் விலை 24,999ரூபாய்க்கு இருக்கிறது, அதுவே இதன் 55 இன்ச் யின் மாடல் விலை 35,999ரூபாயாக இருக்கிறது, மேலும் நீங்கள் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10 சதவிகிதம் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை 23,499ரூபாயில் வாங்கலாம், இந்த டிவியை Flipkart, mi.com யில் செப்டம்பர் 18 அன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Redmi Smart Fire TV 43 இன்ச் மற்றும் 55 இன்ச் சிறப்பம்சம்.

Redmi Smart Fire TV அம்சங்களை பற்றி பேசினால், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் 2024 மாடல்கள் 4K டிஸ்ப்ளே உடன் வருகிறது இதன் ரேசளுசன் 3840 x 2160 பிக்சல் இருக்கிறது இந்த டிவியில் விவிட் பிக்ஜர் இஞ்சன் லோ லேட்டசி மோட் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.

Redmi-Smart-Fire-TV-1.jpg

புதிய ரெட்மி பயர் டிவியில் A55 கவாட் கோர் கோடெக்ஸ் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 2GB ரேம் மற்றும் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இவை Fire TV OS 7 இல் இயங்குகின்றன. பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, ஜீ5, சோனி லிவ் போன்ற பிரபலமான பயன்பாடுகளை உள்ளடக்கிய சுமார் 12 ஆயிரம் ஆப்களை இது சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது.

Redmi Smart Fire TV 43 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடலில் வொயிஸ் ரிமோட்டுடன் வருகிறது இதில் ஏலேக்சா சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன பாப்புலர் ஆப்பான prime video, Netflix போன்ற ஷோர்ட்கட் வழங்கப்படுகிறது

Redmi-Smart-Fire-TV-2.jpg

43 இன்ச் மாடலில் 24W சவுண்ட் அவுட்புட் உள்ளது, அதே சமயம் 55 இன்ச் மாடல் 30W சவுண்ட் வெளியீட்டைக் கொண்டுள்ளது. Dolby Audio, DTS-HD போன்றவற்றுக்கான ஆதரவு உள்ளது. புளூடூத் 5.0, மூன்று HDMI 2.1 போர்ட்கள், இரண்டு USB 2.0 போர்ட்கள், 3.5mm ஜாக் போன்றவை கனெக்டிவிட்டி விருப்பங்களாக வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : Vivo V40e இந்த மாத இறுதியில் அறிமுகமாகும் ஆனால் அதற்க்கு பல லீக் வெளியாகியுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :