ரெட்மி செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அதன் முதல் ஃபயர் OS டிவி Redmi Smart Fire TV 32 இன்ச்சில் அறிமுகமாகியது, இந்த டிவி 32 இன்ச் என்ற ஒற்றை வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நிறுவனம் முதன்முறையாக ஆண்ட்ராய்டு அல்லாத டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசானின் இயங்குதளமான Fire OS இந்த டிவியுடன் கிடைக்கிறது. சிறந்த அமேசான், அலெக்சா ஸ்ட்ரீமிங் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சுற்றுச்சூழல் அமைப்புக்கான ஆதரவுடன் ஸ்மார்ட் டிவி வருகிறது. இந்த டிவியில் கொடுக்கப்பட்டுள்ள ரிமோட் மூலம் செட்-டாப் பாக்ஸையும் கட்டுப்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட்மி ஸ்மார்ட் டிவியின் மற்ற அம்சங்கள் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்வோம்…
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 இன்ச் மாடலின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 ஆகும். அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 11 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் அமேசான் மற்றும் Mi வலைத்தளங்களில் இந்த ஸ்மார்ட் டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி டிவி விற்பனை மார்ச் 21 ஆம் தேதி துவங்குகிறது.
புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி அமேசான் ஃபயர் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இதனுடன் அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் கொண்ட ரிமோட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் குரல் மூலமாகவே டிவியை இயக்கலாம்.
புதிய ஸ்மார்ட் டிவியில் 32 இன்ச் HD ரெடி டில்ப்ளே, விவிட் பிக்ச்சர் என்ஜின் தொழில்நுட்பம், 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, DTS-HD மற்றும் DTS: விர்ச்சுவல் X தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள அமேசான் ஃபயர் ஒஎஸ் 7 ஃபயர் டிவி ஆப் மூலம் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிக ஆப்களில் இருந்து பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகிறது.
இவை தவிர பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ், யூடியூப் போன்ற முன்னணி தளங்களும் இந்த டிவியில் இயங்குகின்றன. அமேசான் மினிடிவியை ஸ்டிரீம் செய்வதோடு, 70-க்கும் அதிக லைவ் சேனல்களை கண்டுகளிக்கும் வசதி கொண்டிருக்கிறது.
இணைப்பைப் பொறுத்தவரை, டிவியில் புளூடூத் 5 உள்ளது மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ஏர்ப்ளே மற்றும் மிராகாஸ்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது. டிவியில் இரண்டு HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஒரு AV இன்புட் சாக்கெட், வயர்டு ஹெட்ஃபோன் அல்லது ஸ்பீக்கர் இணைப்புக்கான 3.5mm சாக்கெட், வயர் இன்டர்நெட் கனெக்டிவிட்டிக்கான ஈதர்நெட் போர்ட் மற்றும் ஒரு ஆண்டெனா சாக்கெட் ஆகியவையும் உள்ளன