Redmi அறிமுகம் செய்தது 32இன்ச் கொண்ட Fire TV இதிலிருக்கும் சுவாரஸ்ய அம்சம்

Updated on 07-Jun-2024
HIGHLIGHTS

Redmi தனது புதிய ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 2024 வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

Xiaomi தனது இந்திய வெப்சைட்டில் புதிய ஸ்மார்ட் டிவியை அமைதியாக லிஸ்ட் செய்தது

இதன் ஆரம்ப விலை ரூ.12,999. ஆகும்.

Redmi தனது புதிய ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 2024 வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Redmiயின் தாய் நிறுவனமான Xiaomi தனது இந்திய வெப்சைட்டில் புதிய ஸ்மார்ட் டிவியை அமைதியாக லிஸ்ட் செய்தது டிவி 32-இன்ச் ஸ்க்ரீன் அளவில் வருகிறது மற்றும் Dolby Audio, DTS-HD மற்றும் DTS Virtual:X தொழில்நுட்ப சப்போர்டை கொண்டுள்ளது புதிய டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கனெக்ட் செய்யப்பட்ட குவாட் கோர் ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் சியோமி தனது ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 2024 வெர்சனை இந்தியாவில் அறிவித்தது. புதிய Xiaomi TVகள் 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்க்ரீன் சைஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் ஆரம்ப விலை ரூ.12,999. ஆகும்.

Redmi Smart Fire TV 32 2024 இந்திய விலை மற்றும் விற்பனை தகவல்

புதிய Redmi Smart Fire TV யின் விலை 11,999 ரூபாயாக இருக்கிறது, நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்மார்ட் டிவியை பட்டியலிட்டுள்ளது, மேலும் இது ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் மூலம் நாட்டில் வாங்குவதற்கும் கிடைக்கும். இதன் முதல் விற்பனை ஜூன் 11ஆம் தேதி தொடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் வாங்கும் போது 1,000 ரூபாய் ஆபர் சலுகையையும் Xiaomi அறிமுகப்படுத்தியுள்ளது.

Redmi Smart Fire TV 32 இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.13,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் சமீபத்திய அப்டேட் செய்யப்பட்ட வேர்சனின் சிறப்பம்சம் முந்தைய மாடலைப் போலவே உள்ளன, ஆனால் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Redmi Smart Fire TV 32 2024 டாப் சிறப்பம்சம்

Redmi Smart Fire TV 32 2024 யில் மூன்று பக்கமும் மெல்லிய பேசிலஸ் டிசைன் மெட்டல் உடன் வருகிறது, இதில் 32 இன்ச் HD+ (1366 x 768 பிக்சல்கள்) டிஸ்ப்ளே உள்ளது. டிஸ்ப்ளே பேனல் நிலையான 60Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 6.5ms மறுமொழி நேரத்தை சப்போர்ட் செய்கிறது . விவிட் பிக்சர் எஞ்சினும் இதில் உள்ளது. இது நான்கு A35 கோர்கள் மற்றும் Mali G31 MP2 GPU ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட்-கோர் ப்ரோசெசரை கொண்டுள்ளது. இந்த டிவியில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

சாப்ட்வேர் பற்றி பேசுகையில் யுதில் புதிய Fire TV OS 7 யில் இயங்குகிறது, இதில் 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ், லைவ் டிவி சேனல்கள், பெற்றோர் கட்டுப்பாடு மற்றும் டேட்டா கண்காணிப்பு ஆகியவை இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. இது ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இது சில பயன்பாடுகளை நேரடியாகத் திறக்க விரைவான அக்சஸ்களை மாற்றுகிறது. கூடுதலாக, ரிமோட்டில் பிரத்யேக அலெக்சா பட்டனும் உள்ளது.

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 2024 இரண்டு 10W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது, இவை ஒன்றாக 20W ஒலி வெளியீட்டைக் கொடுக்கின்றன. இது Dolby Audio, DTS-HD மற்றும் DTS Virtual:Xக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இணைப்பு விருப்பங்களில் டூயல்-பேண்ட் WiFi, Miracast, AirPlay, Bluetooth 5.0, இரண்டு USB 2.0 போர்ட்கள் மற்றும் HDMI போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க Realme Narzo N63 இந்தியாவில் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :