Realme டிவி மற்றும் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் மே 25 அறிமுகமாகும்,
ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது ட்விட்டரில், புதிய சாதனங்கள் இந்தியாவில் மே 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார்.
ரியல்மி பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ரியல்மி டிவி மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரியல்மி பிராண்டு இந்தியாவின் பிரபல வாழ்வியல் சாதனங்களை விற்கும் பிராண்டாக உருவெடுக்கும் பயணத்தை துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது ட்விட்டரில், புதிய சாதனங்கள் இந்தியாவில் மே 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார்.
It’s time to #LeapToNext as we move forward to fulfill our vision of making #realme the most loved Tech Lifestyle brand.
Join us in this journey at 12:30 PM, 25th May on our official channels. pic.twitter.com/Ff9aEytKw0— realme Link (@realmeLink) May 15, 2020
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இது 43 இன்ச் அளவில் நெட்ஃப்ளிக்ஸ் வசதியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய ரியல்மி வாட்ச் சதுரங்க வடிவம் கொண்ட டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக இதய துடிப்பு சென்சார் இயங்கினாலும் இதில் வழங்கப்பட்டுள்ள 160 எம்ஏஹெச் பேட்டரி ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதில் 1.4 இன்ச் டிஎஃப்டி எல்சிடி சர்ச் சுகிறீன் வசதி கொண்ட டிஸ்ப்ளே 320×320 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் வலதுபுறத்தில் ஒற்றை பட்டன் வழங்கப்படும் என்றும் இதன் ரிஸ்ட் பேண்ட்களை கழற்றி மாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile