Realme யின் புதிய டிவி 4 மாடலில் அறிமுகம், UHD ஸ்மார்ட்டிவி அறிமுகம்

Updated on 12-Sep-2024
HIGHLIGHTS

Realme இந்திய சந்தையில் புதிய டெலிவிஷன் ரேஞ்சை அறிமுகம் செய்தது,

இந்த புதிய டிவியை Realme TechLife Cinesonic என்று கூறப்படுகிறது,

ealme TechLife Cinesonic TV பற்றி இங்கு விரிவாகக் பார்க்கலாம்.

Realme இந்திய சந்தையில் புதிய டெலிவிஷன் ரேஞ்சை அறிமுகம் செய்தது, இந்த புதிய டிவியை Realme TechLife Cinesonic என்று கூறப்படுகிறது, ஸ்க்ரீன் சைஸ் , டிஸ்ப்ளே தொழில்நுட்பம் மற்றும் ஆடியோ ஆகியவற்றில் வேறுபடுவதைத் தவிர, அனைத்து விருப்பங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்களுடன் வருகின்றன. Realme TechLife Cinesonic TV பற்றி இங்கு விரிவாகக் பார்க்கலாம்.

Realme TechLife Cinesonic TV விலை

Realme TechLife Cinesonic TV யின் 43 இன்ச் வேரியன்ட் விலை 41,999ரூபாயாக இருக்கிறது, 50 இன்ச் மாடல் விலை 53,999ரூபாயாகும் 55 மாடலின் விலை 66,999ரூபாயக் இருக்கிறது மற்றும் QLED டிவியின் விலை 85,999ரூபாயாக இருக்கிறது மேலும் இந்த டிவியை ப்ளிப்கர்டில் விற்பனைக்கு கிடைக்கும்

Relame- TechLife

Realme TechLife Cinesonic TV சிறப்பம்சம்

Realme TechLife Cinesonic TV 43, 50, 55 மற்றும் 65 இன்ச் சைஸ் ஆப்சனில் வருகிறது, இதில் 43 மற்றும் 50 இன்ச் வேரியண்டில் ஒரு LED டிஸ்ப்ளே உடன் வருகிறது மற்றும் 55 மற்றும் 65 இன்ச் மாடலின் QLED டிசப்லே உடன் வருகிறது, இது வைப்ரேட் டிஸ்ப்லேகளுக்கு குவாண்டம் புள்ளிகளை ஒருங்கிணைக்கிறது. இது மிக சிறந்த வ்யுவிங் அனுபவத்தை தருகிறது மேலும் இந்த டிவி டிஸ்ப்ளே UHD 4K ரேசளுசனுடன் மற்றும் இது 60Hz ரேப்ராஸ் ரேட் சப்போர்டுடன் வருகிறது இதை தவிர இதில் HDR10 மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்கப்படுகிறது

Relame TechLife Cinesonic TV யில் குவாட் கோர் மீடிடேக் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த டிவியில் 2GB ரேம் மற்றும் 16GB ஆண்போர்ட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, சாப்ட்வேர் வாரியாக, டிவிகள் கூகுள் டிவியில் இயங்குகின்றன. ஸ்கிரீன் மிரரிங் மற்றும் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் பிற போன்ற பிரபலமான OTT ஆப்களுடன் டிவிகள் முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

டிவியில் உள்ள கனெக்டிவிட்டி விருப்பங்களில் மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், WiFi மற்றும் Bluetooth ஆகியவை அடங்கும். ஆடியோவைப் பொறுத்தவரை, Realme TechLife Cinesonic தொலைக்காட்சிகள் 40W ஒலி வெளியீட்டைக் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. DBX இன் மொத்த சோனிக் தொழில்நுட்பம் மெய்நிகர் மற்றும் சினிமா சரவுண்ட் சவுன்ட்க்காக வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:FASTag விட வரும் புதிய GNSS சிஸ்டம் எவ்வளவு வித்தியாசம்? இனி பணமும் மிச்சம் நேரமும் மிச்சம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :