Oneplus யின் புதிய 50 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவி இந்தியாவில் அறிமுகம்.

Updated on 12-Dec-2022
HIGHLIGHTS

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ 4K ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது

ஒன்பிளஸ் டிவி Y1S ப்ரோ 55 இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

விற்பனை டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ 4K ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புதிய Y1S ப்ரோ சீரிஸ் டிவி ஆகும். முன்னதாக Y1S ப்ரோ சீரிசில் 50 இன்ச் மாடல் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒன்பிளஸ் டிவி Y1S ப்ரோ 55 இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஒன்பிளஸ், அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்கள், ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது. விற்பனை டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

புதிய ஒன்பிளஸ் டிவியை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்து்ம போது ரூ. 3 ஆயிரம் வரையிலான உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை டிசம்பர் 25 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இத்துடன் முன்னணி வங்கி பரிவர்த்தனைகளில் அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு நோ கோஸ்ட் EMI  முறை வசதியும் வழங்கப்படுகிறது.

Oneplus Y1S சிறப்பம்சம்.

புதிய ஒன்பிளஸ் டிவி பெசல்-லெஸ் டிசைன், HDR 10+, HDR 10, HLG, ALLM, காமா என்ஜின் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் அதிக தெளிவான காட்சிகளை டைனமிக் காண்டிராஸ்ட் மற்றும் வைப்ரண்ட் நிறங்களை வழங்குகிறது. MEMC தொழில்நுட்பத்துடன் வேகமாக நகரும் சீன்கள் மேம்படுத்தப்படுவதாக ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது. இந்த டிவி ஆண்ட்ராய்டு 10.0 பிளாட்ஃபார்ம் கொண்டிருக்கிறது.

இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், ஸ்மார்ட் மேனேஜர், ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச் உள்ளிட்டவைகளை ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். ஆக்சிஜன்பிளே 2.0 230-க்கும் அதிக லைவ் சேனல்களை வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :