Xiaomi அதன் Mi மற்றும் Redmi டிவியின் பல மாடல்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. டெலிவரி செயின் உள்ள சிக்கல்கள் காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுத்தது, இதன் காரணமாக தொலைக்காட்சிகளின் விலை 3-6 சதவீதம் அதிகரித்தது. இப்போது சியோமிக்குப் பிறகு, ஒன்பிளஸ் டி.வி.களும் விலை உயர்ந்தன.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு Y சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய U1S ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இரு டிவி சீரிஸ் விலையையும் ஒன்பிளஸ் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் விலை ரூ. 7 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் டிவி Y1 32 இன்ச் ரூ. 18,999
ஒன்பிளஸ் டிவி Y1 40 இன்ச் ரூ. 26,499
ஒன்பிளஸ் டிவி Y1 43 இன்ச் ரூ. 29,499
ஒன்பிளஸ் டிவி U1S 50 இன்ச் ரூ. 46,999
ஒன்பிளஸ் டிவி U1S 55 இன்ச் ரூ. 52,999
ஒன்பிளஸ் டிவி U1S 65 இன்ச் ரூ. 68,999
ஸ்மார்ட் டிவி மாடல்களின் புதிய விலை ஒன்பிளஸ் மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.