OnePlus அறிமுகம் செய்தது 1 லட்ச ரூபாயில் புதிய ஸ்மார்ட்டிவி அப்படி என்ன சிறப்பு.

OnePlus அறிமுகம் செய்தது 1 லட்ச ரூபாயில் புதிய ஸ்மார்ட்டிவி அப்படி என்ன சிறப்பு.
HIGHLIGHTS

OnePlus நிறுவனம் இந்தியாவில் புதிய டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது

இதன் விலை ரூ.99,999. அதன் முன்கூட்டிய ஆர்டர்கள் மார்ச் 6 முதல் தொடங்கும்

ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 ஆகும்

OnePlus நிறுவனம் இந்தியாவில் புதிய டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது OnePlus TV 65 Q2 Pro ஆகும். இதன் விலை ரூ.99,999. அதன் முன்கூட்டிய ஆர்டர்கள் மார்ச் 6 முதல் தொடங்கும். இதன் விற்பனை மார்ச் 10 முதல் தொடங்கும். இதில், நிறுவனம் பல சக்திவாய்ந்த அம்சங்களைக் கொடுத்துள்ளது, இது அதன் படத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும், அதன் ஒலி மிகவும் சக்தி வாய்ந்தது. ஒன்பிளஸ் டிவி 65 க்யூ2 ப்ரோவின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை நாங்கள் உங்களுக்கு இங்கே கூறுகிறோம்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை ஒன்பிளஸ் வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்கள் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு மார்ச் 6 ஆம் தேதியும், விற்பனை மார்ச் 10 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.

ஒன்பிளஸ் டிவி சிறப்பம்சம் 

புதிய ஒன்பிளஸ் Q சீரிஸ் டிவி மூலம் அந்நிறுவனம் தனது Q சீரிஸ் மாடலை மூன்று ஆண்டுகள் கழித்து அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடலில் 65 இன்ச் QLED 4K பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவாண்டம் டாட் லேயர் தொழில்நுட்பம் உள்ளது.

மேலும் இதில் உள்ள காமா என்ஜின் டிஸ்ப்ளே தரத்தை ஆப்டிமைஸ் செய்கிறது. புதிய Q2 ப்ரோ மாடலில் 70 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் 2.1 சேனல் சப்போர்ட் உள்ளது. டைனாடியோ டியூன் செய்த ஹாரிசான் சவுண்ட்பாரினுள் மொத்தம் ஏழு ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஒட்டுமொத்த ஸ்பீக்கர் அவுட்புட்-இல் 30 வாட் சப்-வூஃபர் இடம்பெற்று இருக்கிறது.

இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 சார்ந்த ஆக்சிஜன்பிளே 2.0 ஒஎஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 மற்றும் NFC கேஸ்ட் அம்சங்கள் உள்ளன. இதை கொண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச், ஒன்பிளஸ் பேட் உள்ளிட்டவைகளை எளிதில் ஒன்பிளஸ் டிவியுடன் இணைத்துக் கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo