Noble Skiodo SmartLite LED TV இந்தியாவில் வெறும் Rs 6,999விலையில் அறிமுகம்..!

Updated on 29-Mar-2019
HIGHLIGHTS

ஸ்மார்ட்லைட் LED. டி.வி. 24 இன்ச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) மாடல்களில் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் 20 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன

இந்தியாவில், அறிமுகமாகிறது நிறைய டிவி யின் விலை ஒரு லட்சம் வரை இருக்கிறது. ஆனால் இதை தவிர  மேலும் சில  தொலைக்காட்சிகள் 10,000ஆயிரம் ரேஞ்க்குள் இருக்கிறது.அந்த வரிசையின் கீழ்  இப்பொழுது  இந்திய சந்தையில்  7000ரூபாய்  பட்ஜெட்  ரேன்ஜில்  அதன் புதிய Noble Skiodo SmartLite LED TV அறிமுகம் செய்துள்ளது, இன்னும்  பல பேர் சாதாரண டிவி மேலும் சிலரது  வீட்டில் அதுகூட  இல்லாமலும் இருக்கிறது. மேலும் இந்த LED TV  அனைத்து மக்களுக்கும் போய்  சேர வேண்டும் என்ற  வகையில் இருக்கிறது.

இத்துடன் புதிய டி.வி.க்கள் குறைந்தளவு மின்சக்தியை பயன்படுத்த ஏதுவாக பிரத்யேக பேக்லிட் செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வு மற்றும் சியோமி போன்ற பிராண்டுகள் தங்களது குறைந்த விலை டி.வி.க்களை அறிமுகம் செய்து பிரபலமாகி வரும் நிலையில், நோபிள் ஸ்கியோடோ மற்றும் ஷின்கோ போன்ற பிராண்டுகள் தங்களது புதிய டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றன. முன்னதாக ஷின்கோ நிறுவனம் 39-இன்ச் டி.வி.யினை ரூ.13,990 விலையில் அறிமுகம் செய்தது.

அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் டி.வி. பிராண்டு நோபிள் ஸ்கியோடோ. இந்தியாவில் ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்திருக்கும் இந்த பிராண்டு தனது 24-இன்ச் மாடலின் விலையை ரூ.6,999 என்றும் 32-இன்ச் மாடலின் விலையை ரூ.8,999 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.

புதிய டி.வி.க்களின் குறைவான கட்டணத்திலேயே ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, விநியோகம் மற்றும் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதிய டி.வி.க்களில் வைபை, லேண் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் யூடியூப், மிராகாஸ்ட், வெப் பிரவுசர் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் டி.வி.யில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.

ஸ்மார்ட்லைட் LED. டி.வி. 24 இன்ச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) மாடல்களில் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் 20 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகின்றன.

புதிய டி.வி.க்கள் இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பயனர்கள் இவற்றை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும். இந்தியாவுக்கென உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த டி.வி.க்கள் மாசு மூலம் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :