பட்ஜெட் விலையில் அதாவது ரூ. 6,799 விலையில் 24 இன்ச் கொண்ட டிவி அறிமுகம்.

பட்ஜெட்  விலையில் அதாவது ரூ. 6,799  விலையில் 24 இன்ச் கொண்ட டிவி அறிமுகம்.
HIGHLIGHTS

நோபில் ஸ்கியோடோ 24 இன்ச் அளவில் கிடைக்கும் ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 6,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

நோபில் ஸ்கியோடோ நிறுவனத்தின் இரண்டு புதிய HD. ரெடி ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

இதில் வழங்கப்பட்டுள்ள இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் 20 வாட் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு செயலிகள், சேவைகள் மற்றும் பில்ட்-இன் கேம்களும் வழங்கப்பட்டுள்ளன. 

நோபில் ஸ்கியோடோ  24 இன்ச் அளவில் கிடைக்கும்  ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 6,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதில் ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ப்ளிப்கார்ட் தளத்தில் டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 189 விலையில் 36 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இதுதவிர பயனர்கள் தங்களின் பழைய டி.வி.யை கொடுத்து அதிகபட்சம் ரூ.3000 வரை தள்ளுபடி பெற முடியும்.

இத்துடன் அறிமுகமான NB32R01 32-இன்ச் 1366×768 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.

இதுதவிர செலக்ட் செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகித உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 32 இன்ச் மாடலில் பில்ட்-இன் கேம்கள், ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் நோபில் ஸ்கியோடோ நிறுவனம் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி.யை ரூ. 10,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இத்துடன் 40-இன்ச் ஃபுல் HD ஸ்மார்ட் டி.வி. ரூ. 16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo