மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே பல அசத்தும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருவது நமக்கு தெரிந்ததே அதனை தொடர்ந்து நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டி.வி. சந்தையில் கொண்டு வர இருக்கிறதுஇந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடல் இந்தியாவில் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் டி.வி.க்கென மோட்டோரோலா நிறுவனம் ப்ளிப்கார்ட் உடன் இணைந்திருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோரோலாவின் ஸ்மார்ட் டி.வி.க்களை ப்ளிப்கார்ட் தயாரித்து விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.
மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 30 வாட் முன்புற ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ட்ரூ சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்படலாம். இத்துடன் டிஸ்ப்ளே பேனலில் MEMC தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய டி.வி.க்களின் விலை சியோமி, தாம்சன், வு, கோடாக் போன்ற நிறுவனங்களின் டி.வி. மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம்
முன்னதாக மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து விட்டது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.