Xiaomi யின் புதிய MI ஆண்ட்ராய்டு டிவி ஸ்டிக் அறிமுக தேதி அறிவிப்பு.
புதிய Xiaomi டிவி ஸ்டிக் இந்தியாவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகமாகிறது
இதில் கூகுள் பிளே வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
Xiaomi MI டிவி ஸ்டிக் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
Xiaomi நிறுவனத்தின் எம்ஐ டிவி ஸ்டிக் சாதனத்திற்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. புதிய சியோமி டிவி ஸ்டிக் இந்தியாவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக இதே டிவி ஸ்டிக் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
MI Tv ஸ்டிக் சிறப்பம்சங்கள்
– ஹெச்டிஎம்ஐ மூலம் 1080 பிக்சல் வீடியோ வசதி
– குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
– ஏர்எம் மாலி 450 ஜிபியு
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 9, குரோம்காஸ்ட்
– கூகுள் அசிஸ்டண்ட், ஹாட்கீ, வாய்ஸ் ரிமோட்
– நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ ஹாட் கீ
– கூகுள் பிளே ஸ்டோர்
– வைபை, ப்ளூடூத் 4.2, மைக்ரோ யுஎஸ்பி பவர்போர்ட்
– டால்பி, டிடிஎஸ் ஆடியோ வசதி
புதிய எம்ஐ டிவி ஸ்டிக் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஸ்பாடிஃபை மற்றும் பல்வேறு செயலிகள், கேம்களுக்கான வசதியை வழங்குகிறது. இதில் கூகுள் பிளே வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய எம்ஐ டிவி ஸ்டிக் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், பில்ட்-இன் குரோம்காஸ்ட் வசதி கொண்டுள்ளது. இதை கொண்டு தரவுகளை 1080 பிக்சல் ரெசல்யூஷனில் ஸ்டிரீம் செய்ய முடியும். இத்துடன் எம்ஐ வாய்ஸ் ரிமோட், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ ஷார்ட்கட், அசிஸ்டண்ட் வசதியுடன் வழங்கப்படுகிறது
புதிய சியோமி எம்ஐ டிவி ஸ்டிக் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile