12000ரூபாய் பட்ஜெட்டில் Metz யின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவி அறிமுகம்.
ஜெர்மனி சார்ந்த Metz நிறுவனம் இந்தியாவில் அதன் நன்கு புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் இன்பினிட்டி ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த நான்கு டிவிகளும் கூகுளின் ஆண்ட்ராய்டு வசதி வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இந்த டிவியின் மூலம் கூகுள் பிளே ஸ்டோர் வசதியின் மூலம் நீங்கள்; எந்த ஒரு ஆப் ஆக இருந்தாலும் நீங்கள் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். அத்தகைய வசதியை இந்த டிவியில் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு ஸ்மார்ட் டி.வி. மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.0 வெர்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற சேவைகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டி.வி.க்களில் 4K டேட்டாக்களுக்கான வசதி கூடுதலாக வழங்கப்படுகிறது.
விலை மற்றும் விற்பனை.
புதிய மெட்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அமேசான் வெப்சைட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மெட்ஸ் 32 இன்ச், 40 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 12,999, ரூ. 20,999, ரூ. 36,999, ரூ. 42,999 என வைக்கப்பட்டுள்ளது.
மெட்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள்:
– 32 இன்ச் (M32E6) HD ரெடி ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி.
– 40 இன்ச் (M50E6) ஃபுல் HD . ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி.
– 50 இன்ச் (M50G2) 4K யு.HD . ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி. (நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)
– 55 இன்ச் (M55G2) 4K யு.HD ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி. (நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile