Romio கேள்வி பட்டு இருப்பிங்க Lumio கேள்விப்பட்டு இருகிங்களா Lumio Vision Smart TV இந்தியாவில் விரைவில்

Updated on 20-Mar-2025

லேட்டஸ்ட் டெக் ப்ராண்டான Lumio யின் Circuit House Technologies அமேசான் பக்கத்தில் டீசர் வெளியிட்டுள்ளது இதை தவிர அதிகாரபூர்வ twitter X பக்கத்திலும் டீசர் வெளியிட்டுள்ளது. இந்த புதிய நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி வரிசையை விரைவில் அறிமுகப்படுத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது. அதே நேரத்தில், இன்று ஸ்மார்ட் டிவியின் முதல் டீசர் பகிரப்பட்டுள்ளது. வாருங்கள், அதன் விவரங்களை மேலும் அறியலாம்.

Lumio Vision Smart TVs டீசர்

நிறுவனம் அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் டீசர் ரிலீஸ் செய்தது அதில் இந்த டிவிகளை வரிசைப்படுத்தியது மேலும் இந்த டிவியின் பெயர் ‘Lumio Vision’ என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளது, மேலும் Lumio twitter X பக்கத்தில் 20 செகண்ட் வீடியோவையும் ஷேர் செய்துள்ளது, அதில் ஸ்மார்ட் டிவி ஒரு ஸ்லீக் டிசைன் உடன் இருப்பதை பார்க்கலாம் மற்றும் இதில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் இருப்பதையும் பார்க்க முடியும், இதை தவிர இந்த ரிமோட்டில் google அசிஸ்டன்ட் டெடிகேட்டட் பட்டன் இருப்பதை பார்க்கலாம்.

இதை தவிர Lumio யின் இந்த வர இருக்கும் டிவியில் Google TV இன்டர்பேஸ் சப்போர்டுடன் வரும் இதன் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான படங்கள் மற்றும் 10,000க்கும் அதிகமான ஆப் அக்சஸ் நன்மை கிடைக்கும், இதனுடன், பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்அப் ஸ்மார்ட் டிவிகளை Dixon Technologies தயாரிக்கும் என்றும் அமேசான் இந்தியாவில் ஆன்லைனில் வாங்கலாம் என்றும் அறிவித்தது.

லுமியோ கடந்த மாதம் இந்தியாவில் புதிய அளவிலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தப்போவதாக முதன்முதலில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த நேரத்தில், இந்த ஸ்மார்ட் டிவிகள் மார்ச் 2025 க்குள் சந்தையில் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது இருப்பினும் இந்த டிவியின் அறிமுக தேதியை குறிப்பிடவில்லை ஆனால் மார்ச் இறுதிக்குள் அறிமுகமாகும்

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் Dixon Technologies இந்தியாவில் ஆப்பிள் டிவைசில் டீல் மெனுபெக்ஜரினில் ஒருவர். இந்நிறுவனம் நாடு முழுவதும் 17 உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் ஒன்று பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க:Vu யின் GloQLED 4K QLED ஸ்மார்ட்டிவியில் அதிரடி ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :