LG யின் பாய் போல சுருட்டி வைத்து கொள்ளக்கூடிய டிவி அறிமுகம்

Updated on 08-Jan-2019
HIGHLIGHTS

LG . நிறுவனம் தனது பயாய் போல சுருட்டி வைக்க கூடிய சிக்னேச்சர் OLED ரக டி.வி. ஆர் மாடலைகன்ஸ்யூமர் இலக்ட்ரோனிக் ஷோ CES விழாவில் அறிமுகம் செய்தது.

LG . நிறுவனம் தனது பயாய் போல சுருட்டி வைக்க கூடிய சிக்னேச்சர் OLED ரக டி.வி. ஆர் மாடலைகன்ஸ்யூமர் இலக்ட்ரோனிக் ஷோ CES  விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற கன்ஸ்யூமர் இலக்ட்ரோனிக் ஷோ CES விழாவில் LG . இந்த டி.வி. மாடல்களின் ப்ரோடோடைப் பதி்ப்புகளை அறிமுகம் செய்திருந்தது. 

தற்சமயம் எல்.ஜி. அறிமுகம் செய்திருக்கும் சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED டி.வி.க்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது. மற்ற ஸ்மார்ட் டி.வி.க்கள் போன்று இல்லாமல், எல்.ஜி.யின் புதுவித சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்க்ரீனை சுருட்டி வைக்கும் வசதியை வழங்குகிறது.

புதிய எல்.ஜி. சிக்னேச்சர் டி.வி. மாடல் பார்க்க சிறிய பெட்டி போன்று காட்சியளிக்கிறது, பின் டி.வி.யை ஆன் செய்ததும் திரை பெட்டியில் இருந்து மெல்ல வெளியே வரும் படி உருவாக்கப்பட்டுள்ளது. திரை சுருட்டப்பட்டு இருந்தாலும், காட்சிகள் மிகவும் தெளிவாக இருக்கும் படி அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது.

LG யின்  சிறப்பம்சங்கள் 

இதுவரை எல்.ஜி.யின் புதிய சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலின் விலையை அறிவிக்கவில்லை. புதிய சுருட்டக்கூடிய டி.வி. தவிர எல்.ஜி. நிறுவனம் க்ரிஸ்டல் சவுண்ட் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்தது. இதனுடன் 88 இன்ச் 8K OLED, 65 இன்ச் 8K OLED, நல்ல சத்தம் தரும் திறன் கொண்ட 65 இன்ச் 4K OLED ஸ்கிரீன் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது..

அலெக்சா மற்றும் ஏர்பிளே 2 போன்ற பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கும் எல்.ஜி. சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் தற்சமயம் 65 இன்ச் அளவில் மட்டும் கிடைக்கிறது. எனினும் இதனை மூன்று விதங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ஃபுல் வியூ ஆப்ஷனில் பெரிய திரை, ஏ.ஐ. பிக்சர் மற்றும் சவுண்ட் செட்டிங்ஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

இரண்டாவது ஆப்ஷன் லைன் வியூ. இந்த ஆப்ஷனில் டி.வி. பாதி அளவில் வெளியே தெரியும். பயனர்கள் இதில் கடிகாரம் மோட் செட் செய்து நேரம், வானிலை அல்லது ஃபிரேம் மோட் மூலம் குடும்ப போட்டோக்கள் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போனில் இருந்து >ஷேர் செய்து பார்க்க முடியும். மூன்றாவது ஆப்ஷனான சீரோ வியூ ஸ்க்ரீன் முழுமையாக உள்ளேயே இருக்கும். எனினும், பயனர்கள் இசையை டால்பி அட்மோஸ் ஆடியோ தரத்தில் அனுபவிக்க முடியும். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :