எல்ஜி நிறுவனத்தின் புதிய டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய டிவி மாடல்கள் OLED, சூப்பர் UHD, UHD மற்றும் ஸ்மார்ட் டிவி பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றில் ஆல்ஃபா 7 மற்றும் ஆல்ஃபா 9 பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. வாய்ஸ் கன்ட்ரோல், வெப் ஓ.எஸ். சப்போர்ட், மொபைல் ரெடி கனெக்ஷன் ஓவர்லே மற்றும் டால்பி அட்மாஸ் சரவுன்டு சவுன்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
அனைத்து எல்ஜி டிவி மாடல்களிலும் புதிய ரிமோட் கன்ட்ரோல் – மேஜிக் ரிமோட் என்ற பெயரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பாயின்ட், க்ளிக், ஸ்கிரால் மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். இன்டர்நெட் வசதி இல்லாமலும் 800-க்கும் அதிகமான வாய்ஸ் கமான்ட்களை புதிய டிவி மாடல்கள் சப்போர்ட் செய்கின்றன. இந்த டிவிக்கள் கேமிங் கன்சோல்களில் இருந்து சவுன்ட் பார் உள்ளிட்டவற்றை செட்டப் செய்யும் வழிமுறைகளுடன் வருகிறது.
இத்துடன் மொபைல் கனெக்ஷன் ஓவர்லே எனும் அம்சம் மொபைல் மற்றும் தொலைகாட்சி திரைகளை ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது. இத்துடன் பயனர்கள் கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றை எல்ஜி டிவியில் கிளவுட் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் ஆப் மூலம் பயன்படுத்த வழி செய்கிறது.
இதில் வழங்கப்பட்டு இருக்கும் ப்ளூடூத் அம்சம் கொண்டு பயனர்கள் டிவி ஆடியோக்களை, ப்ளூடூத் வசதி கொண்ட ஆடியோ சாதனம் அல்லது ஸ்மார்ட்போன்களில் கேட்டு ரசிக்க முடியும். மேலும் HDR, டால்பி விஷன், டெக்னிகலரின் மேம்படுத்தப்பட்ட HDR வசதி, HDR 10 ப்ரோ மற்றும் ஹெச்.எல்.ஜி. ப்ரோ உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.
எல்.ஜி.-யின் 2018 OLED டிவி மாடல்களில் ஆல்ஃபா 9 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது நாய்ஸ் ரிடக்ஷன் அம்சம், மேம்படுத்தப்பட்ட கலர் கரெக்ஷன் அல்காரிதம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து, உயர் ரக ஃபிரேம் ரேட் மூலம் நொடிக்கு 120 ஃபிரேம் தரத்தில் அதிக துல்லியமான மோஷன் படங்களை வழங்குகிறது.
எல்ஜி நிறுவனத்தின் 2018 சூப்பர் UHD டிவி மாடல்களில் 4K, தின்க் ஏ.ஐ. (ThinQ AI), ஆல்ஃபா 7 பிராசஸர், டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் நானோ செல் டிஸ்ப்ளே கிட்டத்தட்ட 100 கோடி நிஜ வாழ்க்கை நிறங்களை பிரதிபலிக்கிறது, இது வழக்கமான டிவி மாடல்களை விட 64 மடங்கு தரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு 2018 OLED மற்றும் சூப்பர் UHD டிவி மாடல்களிலும் 4K சினிமா HDR மற்றும் டால்பி அட்மாஸ் சார்ந்த சரவுன்டு சவுன்டு தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
எல்ஜி இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் புதிய டிவி மாடல்கள் 32 இன்ச் முதல் 77 இன்ச் விலை ரூ.32,500-இல் துவங்குகிறது.