Kodak CA சீரிஸ் புதிய ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்.

Updated on 18-Mar-2020
HIGHLIGHTS

டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 மற்றும் ஹெச்.எல்.ஜி. வசதி வழங்கப்பட்டுள்ளது.

கோடக் நிறுவனம் சி.ஏ. சீரிஸ் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய CA  சீரிஸ் டி.வி.க்கள் 43, 50, 55 மற்றும் 65 இன்ச் மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் ஸ்கிரீன் டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 மற்றும் ஹெச்.எல்.ஜி. வசதி வழங்கப்பட்டுள்ளது.

Kodak CA . டி.வி. சிறப்பம்சங்கள்4K

– 43 / 50 /55 இன்ச் 3840×2160 பிக்சல் எல்.இ.டி. டிஸ்ப்ளே
– குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர்
– மாலி – 450 டூயல்-கோர் GPU
– 1.75 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு டி.வி. 9.0 
– குரோம்காஸ்ட் பில்ட் இன்
– வைபை 802.11 b/g/n 2.4GHz, ப்ளூடூத் 5.0, IR
– 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட், ஆக்ஸ் போர்ட்
– ரிமோட்டில் நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளே ஹாட் கீ
– 30வாட் பாக்ஸ் பாட்டம் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட்

பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய கோடக் டி.வி.க்கள் மெட்டல் ஸ்டான்ட் உடன் வருகிறது. மேலும் இதனை சுவரில் மாட்டிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் கேடக் சி.ஏ. சீரிஸ் டி.வி.க்களில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும், கூகுள் குரோம்காஸ்ட் பில்ட் இன் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை

கோடக் சி.ஏ. டி.வி. சீரிஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 23,999 என்றும் 50 இன்ச் மாடல் ரூ. 27,999 என்றும் 55 இன்ச் மாடல் ரூ. 30,999 என்றும் டாப் எண்ட் 65 இன்ச் மாடல் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கோடக் டி.வி. மாடல்களின் விற்பனை மார்ச் 19-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :