JVC நிறுனம் இந்தியாவில் கடந்த மாதம் ஆறு புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி மாடல்களை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்சமயம் இரண்டு புதிய ஹெச்.டி. டி.வி.க்களை ஜெ.வி.சி. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய டி.வி.க்கள் 32N380C மற்றும் 24N380C என்ற மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இவற்றில் இன்-பில்ட் ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா தர காட்சிகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய
HD டி.வி.க்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக JVC . தெரிவித்துள்ளது.
இரு டி.வி.க்களிலும் மெல்லிய பெசல்கள், ஹெச்.டி. 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றன. இத்துடன் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி சவுண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டி.வி.க்களிலும் கேமிங் மோட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பல்வேறு கேமிங் செயலிகளை பயன்படுத்த முடியும்.
இவை முறையே 32 இன்ச் மற்றும் 24 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்புகளில் இரு டி.வி.க்களும் அளவுகளில் மட்டுமே வேறுபாடு கொண்டிருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு HDMI போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு டி.வி.க்களும் ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும் என ஜெ.வி.சி. தெரிவித்துள்ளது. ஜெ.வி.சி. 32N380C மாடல் விலை ரூ. 9,999 என்றும் 24N380C ஜெ.வி.சி. மாடல் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.