குறைந்த விலையில் Infinix அறிமுகம் செய்யும் 32 இன்ச் கொண்ட டிவி.

குறைந்த விலையில் Infinix அறிமுகம் செய்யும் 32 இன்ச் கொண்ட டிவி.
HIGHLIGHTS

இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது அதன் குறைந்த விலை ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது

இன்பினிக்ஸ் Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Infinix Y1 இன் விலை ரூ.11,000க்கும் குறைவாக இருக்கும். இந்த விலை 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கானது

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது அதன் குறைந்த விலை ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அந்நிறுவனத்தின் இன்பினிக்ஸ் Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Infinix Y1 இந்திய விலை தகவல்.

Infinix Y1 இன் விலை ரூ.11,000க்கும் குறைவாக இருக்கும். இந்த விலை 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கானது. Infinix Y1 இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அதன் சரியான விலை மற்றும் கிடைக்கும் தன்மையை நன்றாக சொல்ல முடியும். Infinix Y1 இன் சாத்தியமான அம்சங்களை இப்போது அறிந்து கொள்ளுங்கள்.

Infinix Y1 யின் எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள்.

Infinix Y1 32 இன்ச் டிஸ்பிளே பேணலுடன் வருகிறது, அது HD+ரெஸலுசனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் 20W வெளியீடு கொண்ட டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படும். மேலும், சில செய்திகளின்படி, இந்த ஸ்மார்ட் டிவியானது Netflix, Amazon Prime, Sony Liv, Zee5, ErosNow, AajTak மற்றும் Hotstar போன்ற ப்ரீலோடட் பயன்பாடுகளைப் பெறும். தற்போது இந்த டிவி குறித்து இதை விட எந்த தகவலும் வரவில்லை. ஆனால் அதன் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம். இருப்பினும், நிறுவனம் ஏதேனும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வழங்கும் வரை இந்த விவரங்களும் தற்காலிகமாக இருக்கும்.

இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று இருக்குமாம். மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo