32 இன்ச் மற்றும் 43 இன்ச் கொண்ட Infinix யின் HD டிவி குறைந்த விலையில் அறிமுகமானது.

32 இன்ச் மற்றும் 43 இன்ச் கொண்ட Infinix யின்  HD டிவி குறைந்த  விலையில் அறிமுகமானது.
HIGHLIGHTS

புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன

இன்பினிக்ஸ் 32எக்ஸ்1 32 இன்ச் ஹெச்டி டிவி விலை ரூ. 11,999

இன்பின்க்ஸ் 43எக்ஸ்1 43 இன்ச் புல் ஹெச்டி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை 32 இன்ச் ஹெச்டி மற்றும் 43 இன்ச் புல் ஹெச்டி வேரியண்ட்களில் கிடைக்கின்றன. 

புதிய டிவி மாடல்கள் மெல்லிய பெசல்கள், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு கொண்டுள்ளன. இரு தொழில்நுட்பங்களும் டிவி பார்க்கும் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் HDR 10 வசதி, அதிகளவு நிறங்கள், 400 நிட்ஸ் பிரைட்னஸ், காட்சிகளை அதிக துல்லியமாக காண்பிக்கும் திறன் கொண்டிருக்கின்றன. 
 
இத்துடன் குவாட்கோர் மீடியாடெக் 6683 பிராசஸர், மாலி 470 MP3 GPU, 1 ஜிபி DDR4 ரேம், 8 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 OS , பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளுக்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் எல்இடி பேனல் ஹார்டுவேரில் புளு லைட் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இன்பின்க்ஸ் நிறுவனத்தின் ஐ-கேர் தொழில்நுட்பத்தை டியுவி ரெயின்லாந்து சோதனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. 

கனெக்டிவிட்டியை பொருத்தவரை வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 43 இன்ச் மாடலில் 3 x ஹெச்டிஎம்ஐ, ஏவி, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி, ஏவி, 32 இன்ச் மாடலில் 2 x ஹெச்டிஎம்ஐ, ஏவி, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி ஏவி வழங்கப்பட்டு இருக்கின்றன. 

இன்பினிக்ஸ் 32எக்ஸ்1 32 இன்ச் ஹெச்டி டிவி விலை ரூ. 11,999 என்றும் இன்பின்க்ஸ் 43எக்ஸ்1 43 இன்ச் புல் ஹெச்டி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo