Infinix நிறுவனம் 43 இன்ச் கொண்ட அசத்தலான பட்ஜெட் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்துள்ளது
இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது
தற்போது இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது
புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி FHD டிஸ்ப்ளே, 20 வாட் டால்பி ஸ்டீரியோ என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்பினிக்ஸ் Y1 சீரிஸ் விலை
இன்பினிக்ஸ் Y1 சீரிஸ் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி-க்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக 32 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 43 இன்ச் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஒன்றாகும்.
இன்பினிக்ஸ் 43Y1 சிறப்பம்சங்கள்
இன்பினிக்ஸ் 43Y1 யின் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில் இதில் 43- இன்ச் LED ஸ்கிரீன், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், FHD ரெசல்யூஷன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் குவாட் கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது இது ப்ரீ லோடட் பயன்பாடுகள் மற்றும் 20W ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டுள்ளது, இது டால்பி ஆடியோவுடன் பொருத்தப்பட்டுள்ளது.
Infinix இன் இந்த ஸ்மார்ட் டிவியில், பிரைம் வீடியோ, யூடியூப், ஜி5, சோனி லிவ் உள்ளிட்ட பல பயன்பாடுகளின் ஆதரவைப் பெறுகிறார்கள். டிவியின் வடிவமைப்பு தட்டையானது மற்றும் உளிச்சாயுமோரம் இல்லை. இந்த டிவியின் படத்தை பார்த்ததும் இது பெசல் லெஸ் ஸ்மார்ட் டிவி என்று தெரிகிறது. இந்த டிவி Flipkart இல் விற்கப்படும், ஆனால் நிறுவனம் அதன் விற்பனை தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile