digit zero1 awards

இந்தியாவின் ரூ.15,000 விலையில் கிளவுட் டிவி அறிமுகம்

இந்தியாவின்  ரூ.15,000 விலையில் கிளவுட் டிவி அறிமுகம்
HIGHLIGHTS

கிளவுட்வாக்கர் டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது கிளவுட் டிவி X2 மாடல்களில் புதிய டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது.

கிளவுட்வாக்கர் டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது கிளவுட் டிவி X2 மாடல்களில் புதிய டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது. 

ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. ரூ.14,990 முதல் துவங்கும் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 32 இன்ச் மற்றும் 55 இன்ச் என இருவித டிஸ்ப்ளேக்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிளவுட் டிவி X2 மாடலில் டிஸ்கவரி இன்ஜின் கொண்டிருக்கிறது. இவை பல மணி நேரங்கள் ஓடக்கூடிய வீடியோக்களை பயனர் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கும். அப்டேட் செய்யப்பட புதிய சூப்பர் ரிமோட் இன்-பில்ட் ஏர் மவுஸ் மூலம் பாயின்ட் மற்றும் க்ளிக் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.

இதன் பேசிக் அம்சங்களை பொருத்த வரை வயர்லெஸ் மீடியா மூலம் மொபைலில் இருக்கும் டேட்டாக்களை டிவி ஸ்கிரீனில் ஷேர்  செய்து கொள்ள முடியும், மொபைல் ஸ்கிரீன் மிரரிங், எக்ஸ் லூமினஸ் டிஸ்ப்ளே, பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் பில்ட்-இன் வை-பை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மூவி பாக்ஸ் செயலியை பயன்படுத்த வாழ்நாள் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

கிளவுட்வாக்கர் நிறுவனம் ஏற்கனவே வளைந்த 4K டிவிக்கள், ஃபிளாட் 4K டிவிக்கள் மற்றும் ஃபுல் ஹெச்டி டிவிக்களை விற்பனை செய்கிறது. ஃபுல் ஹெச்டி டிவி சீரிஸ் நான்கு வேரியன்ட்கள் 50-இன்ச், 39-இன்ச் மற்றும் 32-இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கிறது. 50-இன்ச் ஸ்கிரீன் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.29,999 முதல் துவங்குகிறது.

முந்தைய கிளவுட்வாக்கர் டிவி மாடல்களில் டால்பி டிஜிட்டல் சவுன்ட் தொழில்நுட்பம், ப்ளூடூத் மற்றும் டூயல்-பேன்ட் வைபை தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் புதிய 4K-ரெடி டிவி மாடல்களிலும் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo